Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை: பயிற்சி ஆட்டத்திலே தென்னாப்பிரிக்காவை பஞ்சர் செய்த இந்தியா.. தயவு தாட்சனை இன்றி அடி

நவி மும்பை: டி20 உலகக் கோப்பை 2026 பயிற்சிப் போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. நவி மும்பையில் நடைபெற்ற அதிரடி ஆட்டத்தில் இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா சதம் அடித்து அசத்தினர். டாஸ் வென்ற கேப்டன் சூர்யகுமார் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்த நிலையில் இசான் கிசன் மற்றும் அபிஷேக் சர்மா தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.இருவருமே முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி 5.4 ஓவரில் எல்லாம் 80 ரன்கள் குவித்தனர். குறிப்பாக இசான் கிஷன் தொடக்க வீரராக 20 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார் இதில் ஏழு சிக்ஸர்களும், இரண்டு பவுண்டர்களும் அடங்கும். மறுபுறம் அபிஷேக் ஷர்மா 18 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார்.

இருவரும் மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக ரிட்டையர்ட் அவுட் முறையில் களத்தை விட்டு வெளியேறினர். இதை அடுத்து மூன்றாவது வீரராக திலக் வர்மா விளையாடினார். காயத்திலிருந்து திரும்பிய அவர் வழக்கம் போல் தன்னுடைய அதிரடியை காட்டினார்.

மூன்று பவுண்டரி, மூன்று சிக்சர் என 19 பந்துகளில் 45 ரன்கள் திலக் வர்மா குவித்தார். இதேபோன்று கேப்டன் சூரியகுமார் யாதவும் 16 பந்துகளில் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்ஸர் என 30 ரன்கள் சேர்த்தார். நடுவரிசையில் அக்சர் பட்டேல் இரண்டு பவுண்டரி இரண்டு சிக்சர் என 23 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதேபோன்று ரிங்கு சிங் 16 ரன்களும், ஹர்திக் பாண்டியா 10 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார். இதில் மூன்று சிக்சர், இரண்டு பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் குவித்தது.

அபாரமான இலக்கை நோக்கிப் பயணித்த தென் ஆப்பிரிக்கா அணியை 7 விக்கெட்கள் இழப்புக்கு 210 ரன்களுக்குள் இந்தியா கட்டுப்படுத்தியது. தொடக்க வீரரும் கேப்டன் மார்க்கரம் 19 பந்துகளில் 38 ரன்களில் நல்ல தொடக்கத்தை பெற்றாலும், அதை பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை. ஜார்ஜ் லிண்டே டக் அவுட், பிரவீஸ் 2 ரன்கள், டேவிட் மில்லர் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அணியில் இடம்பிடிக்கப் போட்டியிடும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் ஜேசன் ஸ்மித் ஆகியோர் போராடும் ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

மேலும், ஆல்-ரவுண்டர் மார்கோ ஜான்சென் சில பெரிய ஷாட்களை அடித்தது, அணியின் மிடில் ஆர்டரில் நம்பிக்கை அளித்தது. இருப்பினும், அவர்களின் முயற்சிகள் இந்தியாவின் வலுவான இலக்கை எட்டப் போதுமானதாக இல்லை. தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக ஸ்டெப்ஸ் 21 பந்தில் 45 ரன்கள் சேர்த்தார். இதில் 4 சிக்சர்கள் அடங்கும். இதே போன்று யான்சன் 16 பந்துகளில் 31 ரன்களும், ரிக்கல்டன் 21 பந்துகளில் 44 ரன்களும் எடுத்தனர். இந்தப் போட்டியில் இந்திய அணியிலிருந்து 9 வீரர்கள் பந்துவீசினார்கள். ஆனால் பும்ரா இந்த ஆட்டத்தில் களமிறங்க வில்லை.

Story first published: Wednesday, February 4, 2026, 23:34 [IST]
Other articles published on Feb 4, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+