Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜெயிக்கத்தான் வந்திருக்கோம்.. கோப்பையோடுதான் திரும்புவோம்.. ரெய்னா முழக்கம்!

மெல்போர்ன்: உலகக் கோப்பையை வெல்லப் போவது இந்தியாதான். ஜெயிக்கவே வந்திருக்கிறோம். கோப்பையோடுதான் திரும்புவோம் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

உலகக் கோப்பைக் காலிறுதிப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இன்று நடக்கும் முதல் போட்டியில் இலங்கையும், தென் ஆப்பிரிக்காவும் மோதுகின்றன. நாளைய போட்டியில் இந்தியாவும், வங்கதேசமும் மோதவுள்ளன.

இந்த நிலையில் நாளைய போட்டி குறித்தும், உலகக் கோப்பையை வெல்வது குறித்தும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் ரெய்னா.

India, definitely the team to win World Cup: Suresh Raina
  • நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை தோல்வியைச் சந்தித்திராத இரண்டு அணிகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.
  • சுற்றுப் போட்டிகளில் ஆறு வெற்றிகளைப் பெற்று அம்சமாக காலிறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதேபோல கம்பீரமாக நுழைந்துள்ள இன்னொரு அணி நியூசிலாந்து.
  • நாளை காலிறுதிப் போட்டியில் வங்கதேசத்தை சந்திக்கிறது இந்தியா. இப்போட்டி பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
  • இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில், நாங்கள் உலகக் கோப்பையைத் தக்க வைக்க வந்துள்ளோம். அதைச் சிறப்பாக செய்வோம்.
  • உலகக் கோப்பையைப் பொறுத்தவரை நாம் விளையாடும் ஒவ்வொரு போட்டியுமே முக்கியமானதுதான். எதுவுமே சாதாரணமானதல்ல.
  • அனைத்துப் போட்டிகளுக்கும் நிச்சயம் பிரஷர் இருக்கும். இருப்பினும் நேர்த்தியாக ஆடினால் வெற்றி நிச்சயம்.
  • இதுவரை நடந்ததை விட இப்போதுதான் (காலிறுதிப் போட்டிகள்) மெயின் உலகக் கோப்பையே தொடங்குகிறது. இதில் நாங்கள் நிச்சயம் வெல்வோம்.
  • டிரஸ்ஸிங் ரூமில் திட்டமிடுவதை களத்தில் அமல்படுத்தி வெல்ல முயற்சிப்போம். பாசிட்டிவ் கிரிக்கெட் விளையாட வேண்டியது அவசியமானது. அதை நாங்கள் செய்வோம்.
  • பவுலிங், பேட்டிங், பீல்டிங்கில் எங்களை நாங்கள் நிரூபிப்போம். சிறப்பாக செயல்படுவோம்.
  • கோப்பையை தக்க வைக்க வந்துள்ளோம். அதைச் செய்வோம். வெல்வதற்காக வந்தள்ள அணி இந்தியா. இந்தியாவே வெல்லும் என்றார் ரெய்னா.
Story first published: Wednesday, March 18, 2015, 11:37 [IST]
Other articles published on Mar 18, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+