Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியைக் கழுவிக் கழுவி ஊற்றும் கவாஸ்கர்!

லண்டன்: டோணி தலைமையிலான இந்திய அணிக்கு வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் முறையாக வெற்றி பெறவே தெரியவில்லை. மிகவும் மோசமாக ஆடி வரும் இந்திய அணியைப் பார்க்கும்போது வெறுப்பாக இருக்கிறது என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் இந்தியா ஆடு வரும் விதத்தையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பந்து வீச்சாளர்கள் சற்று சிறப்பாக பந்து வீசிய போதிலும் பேட்டிங் மிகவும் மோசமாக இருக்கிறது. அதை விட இங்கிலாந்து வீரர்கள் ரன் குவிக்க இந்தியப் பந்து வீச்சாளர்கள் அனுமதித்து விட்டனர். இதனால் இந்தியாவின் நிலை மோசமாகியுள்ளது.

தற்போது இந்தியாவை விட இங்கிலாந்து 237 ரன்கள் முன்னிலை பெற்று இக்கட்டான நிலையை நமக்கு ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அணி சரியில்லை

அணி சரியில்லை

இதுகுறித்து கவாஸ்கர் கருத்து தெரிவிக்கையில், தற்போதுள்ள இந்திய இளம் அணி வெளிநாடுகளில் ஸ்திரமாக, நிலையாக ஆடக் கூடிய தகுதியுடன், தரத்துடன் இல்லை.

வாய்ப்புகளை வீணடிக்கிறார்கள்

வாய்ப்புகளை வீணடிக்கிறார்கள்

இளம் வீரர்கள் தங்களது திறமையை நிரூபிக்கக் கிடைத்த நல்ல வாய்ப்புகளை வீணடித்து வருகின்றனர். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த, தொடரை வெல்லக் கூடிய வாய்ப்பை நமது வீரர்கள் தவற விட்டுள்ளனர்.

தவற விட்ட பரிதாபம்

தவற விட்ட பரிதாபம்

லார்ட்ஸ் போட்டியில் நாம் வென்றபோதே அடுத்தடுத்த போட்டிகளையும் வென்றிருக்கலாம். ஆனால் அவர்களை வெல்லவிட்டு விட்டதன் மூலம் தொடரை வெல்லக் கூடிய வாய்ப்பை நாம் தவற விட்டு விட்டோம்

முயற்சியே இல்லை

முயற்சியே இல்லை

பீல்டிங்கிலும், பேட்டிங்கிலும் நாம் முத்திரை பதிக்கத் தவற விட்டோம். முயற்சியே இல்லை. தொடர்ந்து ஒரே மாதிரியான தவறுகளைச் செய்கிறார்கள். இது இந்தியாவுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

ஸ்லிப்பில் தொடர்ந்து சொதப்பல்

ஸ்லிப்பில் தொடர்ந்து சொதப்பல்

ஸ்லிப் பீல்டிங்கில் நாம் தொடர்ந்து கேட்ச்சுகளைத் தவற விடுகிறோம். இது ஆச்சரியமாக இருக்கிறது. இது கவலை தருகிறது. இந்தத் தவறுகளைத் திருத்திக் கொள்ள நமது வீரர்கள் முயற்சிக்காதது வியப்பாக இருக்கிறது.

ஒரே மாதிரி அவுட் ஆகிறார்கள்

ஒரே மாதிரி அவுட் ஆகிறார்கள்

அதேபோல ஒரே மாதிரி வீரர்கள் திரும்பத் திரும்ப அவுட் ஆகிறார்கள். இதுவும் கவலை தருகிறது. இது இளம் அணி, திறமை நிரம்பிய அணி. அதேசமயம், உலகத் தரம் வாய்ந்த சில வீரர்களும் உள்ளனர். ஆனால் தொடர்ந்து தவறுகள் நடக்கின்றன. அதை நாம் உணரவும் இல்லை.

கையை விட்டுப் போய் விட்டது

கையை விட்டுப் போய் விட்டது

வருண் ஆரோன், அஸ்வின் உள்ளிட்டோர் அடுத்தடுத்து விக்கெட்களை வீ்ழ்த்தியதால் நமக்கு சற்று நம்பிக்கை வந்தது. ஆனால் தேனீர் இடைவேளைக்குப் பிறகு அதில் ஓட்டை விழுந்தது. இங்கிலாந்தை ரன் எடுக்க விட்டு விட்டார்கள். இப்போது ஆட்டம் நமது கையை விட்டுப் போய் விட்டது.

என்னத்தச் சொல்ல

என்னத்தச் சொல்ல

தற்போது உள்ள அணியில் பெரிய அளவில் மாற்றம் வருமா என்பது எனக்குத் தெரியவில்லை. அதேசமயம், இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் இந்தத் தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஆஸ்திரேலிய தொடருக்கு மனதளவில் நமது வீரர்கள் தயாராக வேண்டியது அவசியம். நமது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை முடக்கி்னாலும் கூட நமது பேட்ஸ்மேன்களால் ஆஸ்திரேலியாவை முடக்க முடியுமா என்பது தெரியவில்லை என்றார் கவாஸ்கர்.

இந்தியா வரும் மேற்கு இந்தியத் தீவுகள்

இந்தியா வரும் மேற்கு இந்தியத் தீவுகள்

இங்கிலாந்து தொடரை முடித்து கொண்டு இந்தியா தாயகம் திரும்பியதும் மேற்கு இந்தியத் தீவுகளுடன் 4 டெஸ்ட் தொடர், ஒரு நாள் தொடர், டுவென்டி 20 போட்டியில் ஆடவுள்ளது. அதை முடித்துக் கொண்ட பின்னர் ஆஸ்திரேலியா செல்கிறது இந்தியா.

ஆஸ்திரேலியாவில் என்ன நடக்கப் போகிறதோ

ஆஸ்திரேலியாவில் என்ன நடக்கப் போகிறதோ

இங்கிலாந்தை விட ஆஸ்திரேலியா ரொம்ப மோசம். அந்த்த தொடரில் இந்தியா என்ன செய்யப் போகிறதோ என்ற கவலை இப்போதே ரசிகர்களுக்கு வந்து விட்டது.

Story first published: Sunday, August 17, 2014, 12:27 [IST]
Other articles published on Aug 17, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+