Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வினை மட்டும் வச்சுக்கிட்டு எத்தனை நாள் பொழப்பை ஓட்டப் போகிறது இந்தியா.. அக்தர் கிண்டல்

டெல்லி: இந்தியாவிடம் அஸ்வின் மட்டுமே விக்கெட்களை வீழ்த்தும் பந்து வீச்சாளராக திகழ்கிறார். அவரைத் தவிர வேறு யாரும் விக்கெட்டை வீழ்த்தக் கூடிய திறமை படைத்த பந்து வீச்சாளர்களாக இல்லை என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கூறியுள்ளார்.

இந்திய பந்து வீச்சு மிக மோசமாக உள்ளது. வெத்து வேட்டு போல உள்ளது அவர்களின் பந்து வீச்சு. அஸ்வின் மட்டுமே விக்கெட்களை எளிதாக எடுக்கிறார் என்றும் சாடியுள்ளார் அக்தர்.

அஸ்வின் மட்டுமே பந்து வீச்சின்போது தனது முழுக் கோட்டாவையும் பயன்படுத்துகிறார். மற்றவர்கள் வருகிறார்கள், பந்து வீசுகிறார்கள், போகிறார்கள் என்றும் அக்தர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியிலிருந்து...

ஆழமே இல்லாத பந்து வீச்சு

ஆழமே இல்லாத பந்து வீச்சு

இந்தியப் பந்து வீச்சில் சற்றும் ஆழமே இல்லை. அஸ்வின் மட்டுமே தனது முழுக் கோட்டாவுக்கும் பந்து வீசுகிறார்கள். மற்றவர்கள் எதிராளிகளை பயமுறுத்தக கூட முடியாமல் தவிக்கிறார்கள்.

வேகப்பந்து வீச்சா இது?

வேகப்பந்து வீச்சா இது?

இந்தியாவின் வேகப் பந்து வீச்சாளர்களைப் பார்த்து எந்த எதிரணி பேட்ஸ்மேனும் பயப்படுவது போலத் தெரியவில்லை. மிக முக்கியமான வேகப்பந்து வீச்சில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது.

2வது ஸ்பின்னர் இல்லை

2வது ஸ்பின்னர் இல்லை

இந்தியாவின் மிக முக்கிய பலவீனமே, பலவீனமான வேகப் பந்து வீச்சாளர்களும், 2வது ஸ்பின்னர் இல்லாததும் ஆகும்.

முகம்மது சமி - உமேஷ் யாதவ்

முகம்மது சமி - உமேஷ் யாதவ்

முகம்மது சமிக்கு உடம்பு சரியில்லை. உமேஷ் யாதவை அணியில் சேர்க்கவே இல்லை. இப்படி இருக்கும்போது யாரைப் பார்த்து உத்வேகம் பெறுவார்கள் இந்தியப் பந்து வீச்சாளர்கள்?.

மாறுங்கப்பா

மாறுங்கப்பா

டுவென்டி 20 கிரிக்கெட்டில் விளையாடும் அணுகுமுறையை இந்தியா கண்டிப்பாக மாற்றியாக வேண்டும். டோணி காம்பினேஷன் குறித்துக் கவனம் செலுத்த வேண்டும். அவர் செய்யும் முயற்சிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

ராயுடு வேண்டாம்.. ரஹானே வரட்டும்

ராயுடு வேண்டாம்.. ரஹானே வரட்டும்

அம்பட்டி ராயுடுவுக்குப் பதில் அஜிங்கியா ரஹானேவை விளையாட விட வேண்டும். அதுதான் சரியானதாக இருக்க முடியும். ராயுடுவை விட ரஹானேதான் பெஸ்ட்.

'டைம்' சரியில்லை பாஸ்

'டைம்' சரியில்லை பாஸ்

இந்திய அணி தனது விளையாடும் நேரத்தில் மாற்றம் செய்திருக்கலாம். அவர்களுக்கேற்றார் போல விளையாட்டு தொடங்கும் நேரத்தை மாற்றியிருக்கலாம். அப்படி செய்திருந்தால் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

3 ஸ்பின்னர்கள் அவசியம்

3 ஸ்பின்னர்கள் அவசியம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா விளையாட வேண்டும். அதுதான் அவர்களது பலம். அப்படி விளையாடினால் நிச்சயம் இந்தியாவால் தொடரை வெல்ல முடியும் என்றார் அக்தர்.

Story first published: Tuesday, October 6, 2015, 17:19 [IST]
Other articles published on Oct 6, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+