Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசியின் டி 20 தரவரிசைப் பட்டியல்… பாகிஸ்தான் முதலிடம்… 5வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியா

துபாய்: சர்வதேச டி 20 அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தர வரிசை பட்டியலில், இந்திய அணி, 3 இடங்கள் சரிந்து ஐந்தாவது இடத்தை பிடித்தது.

சர்வதேச கிரிக்கெட்டின் டி-20 அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி வெளியிட்டது. அதில் மற்ற அணிகளை காட்டிலும் இந்தியாவுக்கு பெருத்த அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அந்த பட்டியலில் இந்திய அணி 5வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

இந்த பட்டியல் வெளியிடுவதற்கு முன்பாக இந்திய அணி 2வது இடத்தில் இருந்தது. தற்போது 2வது இடத்தில் இருந்து, மூன்று இடங்கள் சரிவை சந்தித்து ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி 286 புள்ளிகளை பெற்று தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் நீடிக்கிறது.

4வது இடத்தில் ஆஸி.

4வது இடத்தில் ஆஸி.

தென் ஆப்ரிக்க அணியானது 262 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணியானது 3வது பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா அணி 261 பெற்று 4வது இடத்தில் இருக்கிறது. 2வது இடத்தில் இருந்து பின் தங்கி, 5வது இடத்தில் தான் இப்போது இந்தியா தள்ளப்பட்டிருக்கிறது.

ராகுலுக்கு 5வது இடம்

ராகுலுக்கு 5வது இடம்

இதே போல சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய வீரர் கே.எல். ராகுல் 726 புள்ளிகளுடன் 5 வது இடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்தின் கோலின் முன்ரோ 825 புள்ளிகளை பெற்றுள்ளார். அவர் இரண்டாவது இடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் பாபர் அசாம் 858 புள்ளிகளுடன் நம்பர் 1 இடத்தில் நீடிக்கிறார்.

17வது இடத்தில் கோலி

17வது இடத்தில் கோலி

ஹிட் மேன் ரோகித் சர்மா 673 புள்ளிகளுடன் 11வது இடத்திலும், ஷிகர் தவான் 644 புள்ளிகளுடன் 16வது இடத்திலும் உள்ளனர். உலக கோப்பை வர உள்ள நிலையில் பெரும் எதிர்பார்ப்பு மற்றும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ள இந்திய கேப்டன் விராட் கோலி 627 புள்ளிகள் பெற்றிருக்கிறார். அவருக்கு பட்டியலில் 17வது இடம் கிடைத்து இருக்கிறது.

முதலிடத்தில் ரஷித்

முதலிடத்தில் ரஷித்

சிறந்த பவுலர்களுக்காக பட்டியலும் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் இந்திய வீரர் குல்தீப் 669 புள்ளிகள் பெற்று தனது 5வது இடத்தை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறார். ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 780 புள்ளிகளுடன் நம்பர் 1 இடத்தில் நீடிக்கிறார். பாகிஸ்தானின் சதாப் கான் 720 புள்ளிகளுடனும் 2வது இடத்திலும், இங்கிலாந்தின் அடில் ரசித் 709 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

ஆல்ரவுண்டர் பட்டியல்

ஆல்ரவுண்டர் பட்டியல்

சிறந்த ஆல்ரவுண்டர்களுக்கான பட்டியலும் பல ஆச்சர்யங்களை கொண்டு உள்ளது. அதில் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் 390 புள்ளிகளுடன் நம்பர் 1 இடத்தில் உள்ளார். வங்கதேச ஆல் ரவுண்டர் சாஹிப் அல் ஹசன் 338 புள்ளிகளுடனும், ஆப்கானிஸ்தானின் முகமது நபி 330 புள்ளிகளுடனும் அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர்.

Story first published: Friday, May 3, 2019, 22:33 [IST]
Other articles published on May 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+