Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசியகோப்பை, 20/20 உலகக்கோப்பை: யுவராஜ் உள்ளே இசாந்த் சர்மா வெளியே…

பெங்களூரு: ஆசிய கோப்பை மற்றும் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. யுவராஜ் சிங் அணியில் இடம் பிடித்துள்ளார்

அதேசமயம் சுரேஷ் ரெய்னா, இஷாந்த் சர்மா அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்..

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 25 ஆம் தேதி முதல் மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல 20 ஓவர் உலக கோப்பை போட்டி மார்ச் 16 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரையிலும் வங்கதேசத்தில் நடைபெற உள்ளது.

India drops Ishant Sharma for Asia Cup, World T20 championships

இசாந்த் சர்மா நீக்கம்

இதற்கான இந்திய அணி பெங்களூருவில் இன்று அறிவிக்கப்பட்டது. 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து இஷாந்த் சர்மா நீக்கப்பட்டுள்ளார். யுவராஜ் சிங்குக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ரெய்னா நீக்கம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து ரெய்னா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

ஆசிய கோப்பை அணி

டோணி (கேப்டன்), ஷிகர் தவான், ரோஹித் சர்மா, கோலி, புஜாரா, அம்பதி ராயுடு, ரஹானே, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர்குமார், முகமது சமி, வருண் ஆரோன், ஸ்டூவட் பின்னி, அமீத் மிஸ்ரா, ஈஸ்வர் பாண்டே.

20 ஓவர் உலக கோப்பை அணி

டோணி (கேப்டன்), தவான், ரோகித் சர்மா, வீராட் கோலி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ரஹானே, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர்குமார், முகமது சமி, வருண் ஆரோன், ஸ்டூவட் பின்னி, அமீத் மிஸ்ரா, மோகித் சர்மா.

Story first published: Tuesday, February 11, 2014, 17:31 [IST]
Other articles published on Feb 11, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+