வாத்துக் கூட்டமாக மாறிப் போன இந்திய கிரிக்கெட் வீரர்கள்!
தர்மசாலா: சார் இந்தியா - இலங்கை மேட்ச் எப்ப ஆரம்பிக்கிறது என்று கேட்டு முடிப்பதற்குள் போட்டியே முடிந்து விட்டது. இதன் மூலம் தொடர்நது 12 போட்டிகளில் தோல்வி அடைந்து வந்த இலங்கை வெற்றியை சுவைத்துள்ளது.
3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருதினப் போட்டிகள், 3 டி-20 போட்டிகளில் விளையாட இலங்கை கிரிக்கெட் அணி வந்துள்ளது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் இரண்டு ஆட்டங்கள் டிராவில் முடிய, 1-0 என, இந்தியா வென்றது.
ஒருதின தொடரின் முதல் ஆட்டம் தர்மசாலாவில் நேற்று நடந்தது. இதில், இலங்கை அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

ஏதோ டோணி இருக்கப் போய்
இந்திய அணி 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் கூல் மகேந்திர சிங் டோணி, 65 ரன்கள் எடுத்து மிகவும் மோசமான தோல்வியில் இருந்து அணியைக் காப்பாற்றினார்.

3 பேருக்கு டபுள்
இந்திய அணியில் டோணி உள்பட 3 பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். 3 பேர் ஒற்றை இலக்க ரன்கள் எடுத்தனர். அதே நேரத்தில் 5 பேர் ஒரு ரன் கூட எடுக்கவில்லை.

4 டக் அவுட்
இதில் 4 பேர் டக்-அவுட்டாயினர். கடைசியாக வந்த யுஸ்வேந்திர சாஹல் 9 பந்துகளைச் சந்தித்தபோதும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகாமால் இருந்தார். ஒரு போட்டியில் அதிக டக்அவுட் என்ற சாதனைப் பட்டியலில், 6 டக் அவுட்களுடன் பல அணிகள் உள்ளன.

மோசமான சாதனை வராமல் போச்சே
அதேபோல் பல அணிகள் 5 டக் அவுட்களை சந்தித்துள்ளன. ஆனால், அந்தப் பட்டியல்களில் இந்திய அணி இல்லை. கடைசி நேரத்தில் அந்த மோசமான சாதனைப் பட்டியலில் சேருவதில் இருந்து தப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications