For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

9 வருடத்திற்கு பின் முதல் தோல்வி.. ஆஸி., தென் ஆப்பிரிக்கா அணிகள் இந்தியாவிடம் வீழ்ந்த கதை

By Veera Kumar

நாக்பூர்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதன் மூலம், அந்த அணியின் 9 வருட வெற்றிப் பயணம் ஒன்றுக்கு தடை போட்டுள்ளது இந்திய அணி.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா நடுவே மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றது. பெங்களூரில் நடைபெறவிருந்த 2வது டெஸ்ட் போட்டி முதல் நாளைதவிர மற்ற நான்கு நாட்களும் பெய்த மழையால் டிரா ஆனது.

இந்நிலையில், இவ்விரு அணிகள் நடுவேயான 3வது டெஸ்ட் போட்டி நேற்றுமுன்தினம் நாக்பூரில் தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டி தென் ஆப்பிரிக்க அணிக்கு வாழ்வா-சாவா என்ற போட்டியாக கருதப்பட்டது.

வாழ்வா-சாவா?

வாழ்வா-சாவா?

ஏற்கனவே ஒரு டெஸ்ட் வென்ற இந்திய அணி, எஞ்சிய 2 டெஸ்ட்டுகளில் ஒன்றில் வென்றாலும், தொடரை கைப்பற்றும் என்ற சூழ்நிலை இருந்தது. தென் ஆப்பிரிக்காவோ 2 டெஸ்ட்டிலும் வெற்றி பெற்றால்தான் தொடரை கைப்பற்ற முடியும் என்ற கட்டாயத்தில் இருந்தது.

9 வருட வெற்றி பயணம்

9 வருட வெற்றி பயணம்

தென் ஆப்பிரிக்க அணி 2006ம் ஆண்டு இலங்கையில் டெஸ்ட் போட்டிகளில் ஆடிய பிறகு தொடர்ந்து 9 வருடங்களாக வெளிநாடுகளில் டெஸ்ட் தொடர்களை இழக்கவேயில்லை. 2008-09 மற்றும் 2012-2013 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலிய மண்ணில், வலிமையான ஆஸி. அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்களும் இதில் அடங்கும்.

தொடர் வெற்றி

தொடர் வெற்றி

இடைப்பட்ட காலத்தில், 2008ல் இங்கிலாந்திலும், வெஸ்ட் இண்டீசில் 2010லும், நியூசிலாந்தில் 2011-12லும், பாகிஸ்தானில், 2007-08லும், இலங்கையில் கடந்த வருடமும், வங்கதேசத்தில் 2007-08லிலும், ஜிம்பாப்வேயில், 2007-08லும், டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது தென் ஆப்பிரிக்கா.

ஒருமுறை வெற்றி

ஒருமுறை வெற்றி

இந்தியாவில் தென் ஆப்பிரிக்க அணி 1996-97ல் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. 2004-05ல் 0-1 என்ற கணக்கில் தோற்றது. 2007-08லும், 2009-10 ஆண்டுகளிலும், நடந்த டெஸ்ட் போட்டிககள் டிரா ஆனது. மொத்தம் வந்த 5 விசிட்டுகளில், 1999ல் மட்டுமே தென் ஆப்பிரிக்கா இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது.

9 வருட சாதனை முடிந்தது

9 வருட சாதனை முடிந்தது

இந்நிலையில், 9 வருடங்களாக தொடர்ந்த சாதனையை இந்தியா இன்று முடித்து வைத்துள்ளது. பிற அணிகளின் சாதனை பயணத்திற்கு தடைபோட்டு அவற்றின் ஆரவார ஆட்டத்தை முடித்து வைப்பதில் இந்தியா எப்போதும் ஸ்பெஷலிஸ்ட்

ஆஸி.க்கு ஆப்பு

ஆஸி.க்கு ஆப்பு

1999ம் ஆண்டு அக்டோபர் 14 முதல், 2001 பிப்ரவரி வரை தொடர்ச்சியாக 16 டெஸ்ட் போட்டிகளை வென்று, வெற்றியை தொடரும் முனைப்போடு இருந்த ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது இந்தியா. இதேபோன்று மற்றொருமுறையும் ஆஸி.யை மண்ணை கவ்வ வைத்தது இந்தியா.

மீண்டும் சிக்கியது

மீண்டும் சிக்கியது

2005 டிசம்பர் 26ம் தேதி முதல், 2008 ஜனவரி 2ம் தேதிவரையிலான காலகட்டத்தில் தொடர்ச்சியாக மீண்டும் 16 டெஸ்ட்டுகளை வென்ற நிலையில் இந்தியாவை சந்தித்தது ஆஸ்திரேலியா. இம்முறை 17 முறை வென்று புது சாதனை படைக்க அது முயன்றது. ஆனால் இந்தியா மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு பிரேக் போட்டது வரலாறு.

கோஹ்லிக்கு முதல் வெற்றி

கோஹ்லிக்கு முதல் வெற்றி

உள்நாட்டு மண்ணில், கோஹ்லி தலைமையில், இந்திய அணி பெற்ற முதல் டெஸ்ட் தொடர் வெற்றி இது. சச்சின் ஓய்வுக்கு பிறகு உள்நாட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் தொடரிலேயே, இந்தியா இந்த சாதனையையும் செய்துள்ளது. 3வது டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்சுகளிலும் எந்த பேட்ஸ்மேனும் 50 ரன்களை கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, November 27, 2015, 16:39 [IST]
Other articles published on Nov 27, 2015
English summary
India ended Australia's streak of 16 consecutive Test wins. India ends South Africa's 9 years dominance outside home.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+