Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வரலாற்றிலேயே அனேகமாக இதுதான் முதல் முறை.. இந்தியா-இங்கிலாந்து போட்டியில் ஒரு அசத்தல் தனித்துவம்!

Recommended Video

WORLD CUP 2019 IND VS ENG | இந்தியா-இங்கிலாந்து போட்டியில் ஒரு அசத்தல் தனித்துவம்!

லண்டன்: இன்றைய இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி கிரிக்கெட் வரலாற்றிலேயே தனித்துவமான போட்டிகளில் ஒன்றாகும். அதுகுறித்த ஒரு சுவாரசிய தகவல் இதோ.

இன்றைய போட்டியை பொறுத்தளவில், இங்கிலாந்துக்கு வாழ்வா, சாவா என்பதைப் போன்றது. ஏனெனில், ஏற்கனவே அந்த அணி இலங்கையுடன் தோற்றது முதல், இங்கிலாந்து அணிக்கு ஆட்டம் ஆரம்பித்தது. ஏற்கனவே பாகிஸ்தானுடனும் தோல்வி, பிறகு ஆஸ்திரேலியாவுடன் தோல்வி என்பதால், இங்கிலாந்துக்கு இது இக்கட்டான போட்டி.

India England cricket match is a unique one

இதனால், பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய, ஆசிய அணிகளுக்கான அரையிறுதி வாய்ப்பு ஏதோ ஒரு மூலையில் இன்னும் திறந்தே இருக்கிறது என்று சொல்லலாம்.

எனவேதான், 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இப்படி ஒரு போட்டியை பார்த்தது இல்லை என்று சொல்லலாம். ஏனெனில், இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால்தான், நாம் மேலே சொன்ன ஆசிய அணிகளுக்கு வாய்ப்பு திறந்து இருக்கும்.

எனவே இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ரசிகர்களும் பிரேயர் செய்து கொண்டு உள்ளனர். அப்படியானால் மொத்த இந்திய துணைக் கண்டம் vs யுனைட்டெட் கிங்டம் நடுவேயான போட்டியாகத்தான் இதை பார்க்க வேண்டியுள்ளது.

பொதுவாக இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று, பாகிஸ்தான் ரசிகர்கள் வேண்டுவது என்பது அரிய நிகழ்வு. ஆனால், அதுபோன்ற நிகழ்வுக்கு இப்போதுதான் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Story first published: Sunday, June 30, 2019, 16:39 [IST]
Other articles published on Jun 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+