இங்கிலாந்து 287 ரன்களுக்கு சுருண்டது... இந்தியா அபார பந்துவீச்சு.... பேட்டிங்கிலும் கலக்குமா!
Recommended Video

பிர்மிங்காம்: இந்தியா, இங்கிலாந்துக்கு அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி எட்பாஸ்டன் மைதானத்தில் நடக்கிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அஸ்வின் 4, ஷமி 3 விக்கெட்களை வீழ்த்தினர். பவுலிங்கை போல பேட்டிங்கிலும் இந்திய அணி கலக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி எட்பாஸ்டன் மைதானத்தில் துவங்கியுள்ளது.
டெஸ்ட் வரலாற்றில் ஆயிரமாவது டெஸ்டில் விளையாடும் முதல் அணியான இங்கிலாந்து டாஸை வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியில் புஜாரா, குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்படவில்லை. அதே நேரத்தில் உமேஷ் யாதவ், முகமது ஷமி, இஷாந்த் சர்மா என மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன், சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.

குக் அவுட்
டாஸை வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அலிஸ்டர் குக், கீடன் ஜென்னிங்ஸ் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 13 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் குக் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ஜென்னிங்ஸ் மற்றும் ஜோ ரூட் நிதானமான விளையாடினர். 42 ரன்கள் எடுத்த நிலையில் ஜென்னிங்ஸ் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டேவிட் மாலன் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ரன் குவித்தார் ரூட்
ரூட் மற்றும் ஜானி பிரிஸ்டோ இணை மீண்டும் இந்திய பவுலர்களுக்கு பிரச்னை கொடுத்தது. 80 ரன்கள் எடுத்த நிலையில் ஜோ ரூட் ரன்அவுட்டானார். பிரிஸ்டோ 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

285 ரன்கள்
அதன்பிறகு அஸ்வினின் சுழற்பந்தை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் தொடர்ந்து ஆட்டமிழந்தனர். முதல் நாள் ஆட்டநேர இறுதியில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது. பென் ஸ்டோக்ஸ் 21 ரன்கள் எடுத்தார்.

சுருண்டது இங்கிலாந்து
285 ரன்கள் என்ற முதல் நாள் ஸ்கோருடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 2வது நாளில் 1.4 ஓவர்கள் மட்டுமே நீடித்தது. 24 ரன்கள் எடுத்த நிலையில் சாம் குர்ராம் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்களை வீழ்த்தினார். முகமது ஷமி 3, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.


Click it and Unblock the Notifications