உலகக் கோப்பை அரை இறுதிக்கு முன்றியது இந்தியா
துபாய்: பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை போட்டியின் அரை இறுதிக்கு முன்னேறியது இந்திய அணி.
பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள், யு.ஏ.இ.,யில் நடந்து வருகிறது. இதில், நடப்பு சாம்பியனான இந்தியா, தனது முதல் ஆட்டத்தில் இலங்கையை அபாரமாக வென்றது. முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி மழையால் மைதானம் ஈரமாக இருந்ததால் கைவிடப்பட்டது. மற்றொரு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

மற்றொரு லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் ஆடிய வங்கதேசம், 40 ஓவர்களில், 8 விக்கெட் இழப்புக்கு, 226 ரன்கள் குவித்தது. இந்தியா இந்த இலக்கை, விக்கெட் ஏதும் இழக்காமல், 18.4 ஓவர்களிலேயே எட்டி வென்றது.
கேப்டன் அஜய் ரெட்டி, 60 பந்துகளில், 14 பவுண்டரிகளுடன், 101 ரன்கள் குவித்தார். மற்றொரு துவக்க ஆட்டக்காரரான சுனில் ரமேஷ்,. 57 பந்துகளில், 17 பவுண்டரிகளுடன், 105 ரன்கள் குவித்தார். அஜய் ரெட்டி, 8 ஓவர்களில், 4 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினார்.
அதற்கடுத்து நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் நேபாளம் அணியை, 8 விக்கெட் வித்தியாசத்தில் இநந்தியா வென்றது. முதலில் ஆடிய நேபாளம், 156 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா, 2 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது.
இந்த உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாத இந்திய அணி, வரும், 17ம் தேதி நடக்கும் அரை இறுதியில் வங்கதேசம் அணியுடன் மோத உள்ளது.


Click it and Unblock the Notifications