Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி.யின் 19 ஆண்டு சாதனையை சமன் செய்த இந்தியா.. ஸ்ரேயாஸ் ஐயரின் ரெக்கார்ட்க்கு நிகழ்ந்த பரிதாபம்

டெல்லி : சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் 19 ஆண்டுக்கால சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது.

தற்போது, இன்னும் 2 மாதங்கள் எஞ்சியுள்ள நிலையில், அதனை உடைக்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.

இதே போன்று ஸ்ரேயாஸ் ஐயரின் சாதனை ஒன்றும், தென்னாப்பிரிக்கா 99 ரன்களில் ஆட்டமிழந்தததால் நிகழாமல் போய்விட்டது. இவ்விரண்டையும் தற்போது காணலாம்.

வெற்றிகள்

வெற்றிகள்

சர்வதேச கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த அணி என்றால் , அது கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவாக தான் இருந்தது. தற்போது அந்த அணியின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும் நிலையில், அந்த இடத்தை தற்போது இந்தியா பிடித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டிலும் அதிக வெற்றியை பெற்ற அணிகளின் பட்டியலை எடுத்து பார்த்தாலே தெரியும்.

சாதனை சமன்

சாதனை சமன்

2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி 38 வெற்றிகளை பெற்றதே, ஒரு ஆண்டில் அதிக வெற்றிகள் பெற்ற அணியின் சாதனையாக இன்று வரை உள்ளது. தற்போது இந்திய அணி அதனை சமன் செய்துள்ளது. இன்னும் 2 மாதத்திற்கு போட்டிகள் இருப்பதால் இந்திய அணி இந்த சாதனையை உடைக்க வாய்ப்புள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயர் சாதனை

ஸ்ரேயாஸ் ஐயர் சாதனை

இதே போன்று கடந்த 6 ஆண்டில் இந்தியா மட்டும் 4 முறை அதிக வெற்றிகள் பெற்ற அணியாக இருந்துள்ளது. கொரோனா காலத்தில் மட்டும் இந்தியா அந்த சாதனையை நிகழ்த்த முடியாமல் போய்விட்டது. இதே போன்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 6 முறை 40 ரன்களுக்கு மேல் அடித்திருந்தார்.

முடிவுக்கு வந்தது

முடிவுக்கு வந்தது

இன்றைய ஆட்டத்தில் அவர் 40 ரன்களுக்கு மேல் அடித்திருந்தால், கோலிக்கு பிறகு இந்த சாதனையை செய்த வீரர் என்ற பெருமையை பெற்று இருப்பார். ஆனால் இன்று இலக்கு 100 ரன்கள் என்பதால் அவர் ஆட்டமிழக்காமல் 28 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய அணி வென்றது. இதனால் ஸ்ரேயாஸ் ஐயரின் சாதனை பறிபோனது.

Story first published: Tuesday, October 11, 2022, 22:19 [IST]
Other articles published on Oct 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+