Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்துடன் தோல்வி.. படுமோசமான சாதனையை பதிவு செய்த இந்தியா.. ரசிகர்கள் ஷாக்..!!

எட்ஜ்பாஸ்டன்: உலக கோப்பையில் இங்கிலாந்திடம் பெற்ற தோல்வியின் மூலம் மிக மோசமான வரலாற்றுச் சாதனையை ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இந்திய அணி படைத்திருக்கிறது.

இங்கிலாந்து உலக கோப்பையில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு தோல்வியை தழுவாத அணியாக திகழ்ந்தது. அதற்கு இங்கிலாந்து முட்டுக்கட்டை போட்டிருக்கிறது. இங்கிலாந்துடன் மோதிய ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது.

இந்த தோல்விக்கு பின்னர், 7 லீக் போட்டிகளில் ஆடிய இந்திய அணி 5 வெற்றிகள், ஒரு தோல்வி மற்றும் ஒரு போட்டி மழையின் காரணமாக ரத்து என மொத்தம் 11 புள்ளிகளுடன் பட்டியலில் 2ம் இடம் வகிக்கிறது. இந்த தோல்வியின் மூலம் இந்தியா ஒரு மோசமான சாதனையை படைத்திருக்கிறது.

972 போட்டிகளில் பங்கேற்பு

972 போட்டிகளில் பங்கேற்பு

1974ம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளில் ஆடி வரும் இந்தியா, இதுவரை 972 ஒருநாள் போட்டிகளை சந்தித்துள்ளது. அதில் 515 போட்டிகளில் வெற்றி. 418 போட்டிகளில் தோல்வி. எஞ்சிய 40 போட்டிகளில் எவ்வித முடிவும் இல்லை.

இந்தியாவுக்கு 418 தோல்வி

இந்தியாவுக்கு 418 தோல்வி

தற்போது இங்கிலாந்திடம் உலக கோப்பையில் தோற்று போயிருக்கிறது. இந்த தோல்வியையும் சேர்த்தால், ஒருநாள் போட்டிகளில் 418 தோல்விகள். இதன் மூலம். ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில், அதிகமுறை தோல்வியை தழுவியுள்ள அணி என்கிற இலங்கை அணியின் மோசமான சாதனையை சமன் செய்துள்ளது இந்தியா.

வெற்றியின் சதவீதம்

வெற்றியின் சதவீதம்

ஒருநாள் அரங்கில், இந்திய அணியின் வெற்றி சதவீதம் 54.66% ஆகும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு பிறகு பெற்ற அதிகபட்ச வெற்றி பெற்று, பட்டியலில் 3ம் இடத்தில் இருக்கிறது.

2 போட்டிகள் பாக்கி

2 போட்டிகள் பாக்கி

இந்தியாவுக்கு நடப்பு உலக கோப்பை தொடரில் இன்னும் 2 ஆட்டங்கள் பாக்கி உள்ளன. அதில் ஒரு ஆட்டத்தில் வங்கதேசத்தையும், மற்றொரு போட்டியில் இலங்கையையும் சந்திக்கிறது. ஏதேனும் ஒரு போட்டியில் வென்றாலும் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறி விடும்.

Story first published: Monday, July 1, 2019, 20:04 [IST]
Other articles published on Jul 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+