டி20 உலககோப்பையில் யாருக்கு வாய்ப்பு..டாப் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் யார்?பயிற்சியாளர் ஸ்ரீதர் கருத்து
மும்பை: டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற உள்ள வேகப்பந்துவீச்சாளர்கள் யார் என்பது குறித்து முன்னாள் பயிற்சியாளர் ஸ்ரீதர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு இப்படி பலம் வாய்ந்ததாக விளங்குகிறது என்றால், அதற்கு காரணம் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் ஸ்ரீதர் தான்.
ஜாகிர் கான் இல்லை என்றால் இந்திய டீம் அவ்வளவு தான் என்று கருதப்பட்ட இந்திய அணிக்கு, ஒரு வேகப்பந்துவீச்சு பட்டாளத்தையே உருவாக்கியவர்.

3 பேர் யார்?
டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி வெல்ல வேண்டும் என்றால் பந்துவீச்சும் மிகவும் முக்கியம். தற்போது இந்திய அணியில் அதிக வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். ஆனால் பிளேயிங் லெவனில் 3 வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். இந்த நிலையில், அந்த 3 பேர் யார் என்பது குறித்து ஸ்ரீதர் கூறிய கருத்தை பார்க்கலாம்.

புவனேஸ்வர் குமார்
தற்போது நமக்கு நிறைய பந்துவீச்சாளர்கள் இருப்பதால் யாரை விடுவது? யாரை சேர்ப்பது என்ற குழப்பம் நீடிக்கிறது. ஆனால் நான் வெளிப்படையாகவே கூறுகிறேன். வெறும் 3 வீரர்களுக்கு தான் வாய்ப்பு கிடைக்கும். அது வெறு யாரும் இல்லை புவனேஸ்வர் குமார், பும்ரா, முகமது ஷமி மட்டும் தான்.

முகமது ஷமி
இந்த பந்துவீச்சளர்கள் இடம்பெற்றால் கவலையே இல்லை. புவனேஸ்வர் குமாரை வைத்து நீங்கள் புது பந்தில் 2 ஓவர், பழைய பந்தில் 2 ஓவர்களை வீசலாம். இதே போன்று முகமது ஷமியும் புது பந்தில் பேட்ஸ்மேனுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பந்துவீசகூடியவர். இதனால் இவ்விருவரையும் வைத்து பவர் பிளேவில் 4 ஓவர்களை வீசி விடலாம்.

கூடுதல் வீரர்கள்
ஹர்திக் பாண்டியா போன்ற ஆல்ரவுண்டர் இருககிறார். கூடவே ஜடேஜாவும் அணியில் இருக்கிறார். இதனால் இந்திய அணிக்கு 5வது பந்துவீச்சாளரும், 6வது பந்துவீச்சாளரும் இருக்கிறார்கள். கடைசியாக நடைபெற்ற டி20 உலகக் கோப்பையிலிருந்து கணக்கில் எடுத்து கொண்டால் புவனேஸ்வர் குமார் 18 போட்டியில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஓவருக்கு 6.94 ரன்களை தான் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications