Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்ரேயாஸ் ஐயரை பங்கமாக கலாய்த்த ஸ்ரீகாந்த்.. சல்லி சல்லியா நொறுக்கிட்டாரு.. ஒரே அடியாக இமேஜ் டேமஜ்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயரின் இமேஜை ஒரே அடியாக முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் குளோஸ் செய்து விட்டார்.

இந்திய அணியின அடுத்த கேப்டன் என்று பாவிக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டன் பதவியை வகித்தார்.

அந்த தொடரில் கூட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 அரைசதம் விளாசி அசத்தி இருக்கிறார்.

ஸ்ரேயாஸ் குறை

ஸ்ரேயாஸ் குறை

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் கூட ஆட்டமிழக்காமல் 201 ரன்களை மொத்தமாக விளாசி இருந்தார். இதனால், விராட் கோலியின் இடத்தை நிரப்ப போவது இவர் தான் என்றும் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பேட்டிங்கில் ஒரு குறை இருந்தது பிறகு கண்டபிடிக்கப்பட்டது.

சொதப்பிய ஐயர்

சொதப்பிய ஐயர்

அதாவது ஷாட் பாலை வீசினால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அடிக்க தெரியாது. விரைவில் ஆட்டமிழந்து விடுவார். அதன் பிறகு நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 டி20 போட்டியில் கூட ஸ்ரேயாஸ் ஐயர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துவிட்டார். இங்கிலாந்து எதிரான முதல் டி20 போட்டியில் அவர் 28 ரன்கள் அடித்தார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பிளேயிங் லெவனில் இடம் கிடைத்தும், பேட்டிங் செய்ய வாய்ப்பு. இல்லை.

டக் அவுட்

டக் அவுட்

இந்த நிலையில், வெஸ்ட் அண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரண்டு அரைசதம் அடித்து அசத்தினார். இதனால், டி20 அணியில் தீபக் ஹூடாவுக்கு பதில், ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைத்தது. ஆனால் அவர் 4 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட்டாகி இருக்கிறார். இந்த நிலையில் தான் ஸ்ரேயாஸ் ஐயரை , ஸ்ரீகாந்த் கிண்டல் செய்துள்ளார்.

ஸ்ரீகாந்த் கிண்டல்

ஸ்ரீகாந்த் கிண்டல்

ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு சிறந்த வீரர் என்று எல்லாரும் சொல்கிறார்கள். என்னை பொறுத்த வரை அவர் சிறந்த வீரர் கிடையாது. மோசமான பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் போது ஸ்ரேயாஸ் ஐயர் சிறந்த பேட்ஸ்மேன். அதுவே சிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் போது ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு மோசமான பேட்ஸ்மேன் என்று பங்கமாக கலாய்த்துள்ளார். இதன் மூலம் ஸ்ரேயாஸ் ஐயர், இலங்கை, போன்ற பலம் குன்றிய அணியுடன் தான் விளையாடுவார் என்ற பொருள்படும் வகையில் கூறி இருக்கிறார்.

Story first published: Saturday, July 30, 2022, 21:01 [IST]
Other articles published on Jul 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+