கட்டாக் அட்டாக் இந்தூரில் தொடருமா?
இந்தூர்: ஜெயலலிதாவின் 20 நிமிட வீடியோ ஒரு கலக்கு கலக்கிய அதே நேரத்தில், இலங்கைக்கு எதிராக கட்டாக்கில் நடந்த முதல் டி-20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தூரில் நாளை நடக்கும் போட்டியிலும் அது தொடரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்று வென்றது. அடுத்து நடைபெற்ற ஒருதினப் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கி்ல் வென்றது.
அதைத் தொடர்ந்து, மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில், கட்டாக்கில் நேற்று நடந்த முதல் போட்டியில் இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது போட்டி இந்தூரில் நாளை நடக்கிறது. மூன்றாவது போட்டி, 24ல் மும்பையிலும் போட்டிகள் நடக்க உள்ளன.

ராசியை மாற்றிய அணி
கட்டாக் போட்டியில் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் அனைத்து துறைகளிலும் இந்திய வீிரர்கள் சிறப்பாக விளையாடினர். ராசியில்லாத மைதானம் என்று பெயர் பெற்ற கட்டாக்கில் இந்திய அணி தனது அட்டாக்கால், மாற்றி அமைத்தது.

தொடர் தொடர் வெற்றி
இலங்கைக்கு சென்றபோது, அனைத்து தொடர்களையும் வென்றதுபோல், தற்போது இலங்கை அணிக்கு எதிரான அனைத்து தொடர்களையும் வெல்வதற்கான மிகப் பெரிய வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்துள்ளது.

ஆண்டின் கடைசி தொடர்
இந்த ஆண்டில் கடைசி சர்வதேச போட்டித் தொடர் என்பதால், முதல் இரண்டு தொடர்களைப் போலல்லாமல், 3-0 என்று டி-20 தொடரை இந்திய அணி வெல்லும் என்பதை எந்த கருத்துக் கணிப்பும் நடத்தாமல் தைரியமாக கூறலாம்.

பந்து வீச்சு அருமை
இந்திய பேட்டிங் வரிசை டி20 போட்டிகளில் அருமையாக க்ளிக் ஆகிறது. டி20 ஸ்பெஷலிஸ்ட் பந்து வீச்சு இரட்டையர்களாக சஹல் மற்றும் குல்தீப் உருவாகியுள்ளனர். இவர்களை மிடில் ஓவர்களில் சந்தித்து ரன் குவிப்பது பெரிய பேட்ஸ்மேன்களுக்கும் சிம்ம சொப்பனம். இதை கடந்த பல போட்டித் தொடர்களில் பார்த்துள்ளோம். எனவே இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வொய்ட் வாஷ் செய்து வெல்ல பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications