கோஹ்லிக்கு ரிசப்ஷன்.. ரோஹித் அன்ட் டீமின் பரிசு.. ஒயிட்வாஷ் வெற்றி!
மும்பை: இலங்கைக்கு எதிரான டி-20 தொடரை ஏற்கனவே வென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மும்பையில் நாளை நடக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியை சீக்கிரமாக வெற்றியுடன் முடித்துவிடும். காரணம் - விராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மாவின் ரிசப்ஷனில் அவர்கள் பங்கேற்க வேண்டும்.
இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்று வென்றது. அடுத்து நடைபெற்ற ஒருதினப் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கி்ல் வென்றது.

அதைத் தொடர்ந்து, மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில், கட்டாக் மற்றும் இந்தூர் போட்டிகளில் அபாரமாக வென்று, தொடரையும் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டி மும்பையில் நாளை நடக்க உள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருதினப் போட்டித் தொடரை ஒயிட்வாஷ் செய்ய முடியாத நிலையில், இந்தத் தொடரை, இந்திய அணி ஒயிட்வாஷ் செய்வதற்கு சாதகமான அம்சங்கள் பல உள்ளன.
இதையெல்லாம்விட, இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மாவின் திருமண ரிசப்ஷன் மும்பையில் நாளை நடக்க உள்ளது. அதனால், 7 மணிக்கு தொடங்கும் போட்டியில் மிக விரைவாக வெற்றி பெற்று, ரிசப்ஷனுக்கு செல்வதற்கு இந்திய வீரர்கள் துடிப்புடன் உள்ளனர்.
மேலும் ஒயிட்வாஷ் வெற்றி கோஹ்லிக்கு, திருமண பரிசாகவும் அமையும்.
Story first published: Monday, December 25, 2017, 9:04 [IST]
Other articles published on Dec 25, 2017


Click it and Unblock the Notifications