Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான்காவது முறையாக உலகக் கோப்பையை வெல்ல டிராவிட் அணி தயார்!

குயின்ஸ்லாந்து: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைக்க இந்திய அணி தயாராக உள்ளது.

நியூசிலாந்தில், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. பி பிரிவில் இடம்பெற்ற இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் பப்புவா நியூ குய்னா அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

India eye for world cup


அடுத்து ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் மீண்டும் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்தியது, தொடர்ந்து மூன்று ஆட்டங்களிலும் வென்று கால் இறுதிக்கு நுழைந்துள்ளது இந்திய அணி.

இதற்கு முன், 2000, 2008, 2012 என மூன்று முறை இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. கடந்தாண்டு பைனலில் வெஸ்ட் இன்டீஸ் அணியிடம் தோல்வியடைந்தது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மட்டுமே இதுவரை மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. தற்போதைய நிலையில், நெடுஞ்சுவர் ராகுல் டிராவிட் பயிற்சி அளிக்கும் இந்திய அணியே, இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணியாக கருதப்படுகிறது.

காலிறுதி போட்டிகள் நாளை துவங்குகின்றன. நாளை நடக்கும் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன. 24ம் தேதி பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்கா மோதுகின்றன. 25ம் தேதி ஆப்கானிஸ்தான் – நியூசிலாந்து அணிகளும், 26ம் தேதி இந்தியா – வங்கதேச அணிகளும் மோதுகின்றன.

இந்த உலகக் கோப்பையில், இந்தியாவைத் தவிர இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மட்டுமே அனைத்து போட்டிகளிலும் வென்றுள்ளது.

நான்காவது முறையாக கோப்பையை வெல்வதற்கு இந்திய அணிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பார்வையற்றோருக்கான உலகக் கோப்பையுடன், ஜூனியர் உலகக் கோப்பையையும் இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கலாம்.







Story first published: Monday, January 22, 2018, 13:59 [IST]
Other articles published on Jan 22, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+