நாளை 2வது ஒருநாள் போட்டி: வாழ்வா- சாவா நிலையில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும் இந்தியா!
டர்பன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி நாளை டர்பன் நகரில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் பெற்ற கேவலமான தோல்விக்கு இந்தியா நாளை பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பாப்பு ரசிகர்களிடத்தில் உள்ளது.
தென்னாப்பிரிக்கா, இந்தியா இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில் ஜோகன்னஸ் பர்க்கில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 141 ரன் வித்தியாசத்தில் தோற்றது.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மரணம் அடைந்ததால் எஞ்சிய போட்டிகள் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் திட்டமிட்டப்படி போட்டி நடைபெறும் என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
அத்துடன் நடப்பு தொடர், நெல்சன் மண்டேலாவுக்கு அர்ப்பணம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி 2-வது ஒரு நாள் போட்டி நாளை டர்பனில் நடைபெற உள்ளது.

வென்றாக வேண்டிய கட்டாயம்
இந்த ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியமானது. தொடரை இழக்காமல் இருக்க வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இந்திய அணிக்கு உள்ளது.

தடுமாறிய இந்திய வீரர்கள்
இந்திய ஆடுகளத்தில் அசத்திய தவான், ரோஹித் சர்மா, யுவராஜ் சிங், ரெய்னா தென்னாப்பிரிக்காவில் மோசமாகவே விளையாடினர்

பந்துவீச்சும் மோசம்
அதேபோல் மொகித்சர்மா ரன்களை வாரி வாரி கொடுத்தார். முகமது சமியும், புவனேஸ்வர் குமாரும் வழக்கம்போல பந்து வீசவில்லை. இதை சரிசெய்து விளையாட வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது.

தொடரை வெல்ல மும்முரம்
நாளைய போட்டியில் இந்தியாவை பந்தாடினால் தொடரை வென்று விடலாம் என்பதால் தென்னாப்பிரிக்காவும் சளைக்காமல் விளையாடும் என்பதால் நாளைய போட்டி பரபரப்பாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications