Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசியக் கோப்பை கிரிக்கெட்..... செப். 19ல் பாகிஸ்தானுடன் இந்தியா மோதுகிறது!

டெல்லி: ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தாண்டு செப்டம்பர் 19ம் தேதி நடக்கும் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா மோதுகிறது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரசு எமிரேட்சில் இந்தாண்டு செப்டம்பர் 15ம் தேதி துவங்குகிறது. இதற்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

India to face pakistan in asia cup cricket

இதில் மொத்தம் 6 நாடுகள் பங்கேற்கின்றன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணி இடம்பெறுகிறது. பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளன.

தகுதிச் சுற்று ஆட்டங்களில் யு.ஏ.இ., சிங்கப்பூர், ஓமன், நேபாளம், மலேசியா மற்றும் ஹாங்காங் விளையாடுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, ஏ பிரிவில் இடம்பெறும்.

ஒவ்வொரு பிரிவிலும் லீக் ஆட்டங்கள் நடக்கும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணி சூப்பர் 4 பிரிவுக்கு முன்னேறும். அதில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பைனலில் விளையாடும். பைனல் துபாயில் செப். 28ல் நடக்கிறது.

2016ல் நடந்த ஆசியக் கோப்பை போட்டி டி-20 போட்டியாக நடந்தது. தற்போது ஒருதினப் போட்டியாக நடக்க உள்ளது. நடப்பு சாம்பியனான இந்தியா செப். 18ல் தகுதிச் சுற்றில் வெல்லும் அணியுடன் விளையாடுகிறது. செப். 19ல் பாகிஸ்தானுடன் விளையாடுகிறது.

முதல் சுற்று போட்டிக்கான முழு அட்டவணை

செப். 15 : வங்கதேசம் -இலங்கை
செப். 16 : பாகிஸ்தான் - தகுதிச் சுற்றில் வெல்லும் அணி
செப். 17 : இலங்கை - ஆப்கானிஸ்தான்
செப். 18 : இந்தியா - தகுதிச் சுற்றில் வெல்லும் அணி
செப். 19 : இந்தியா - பாகிஸ்தான்
செப். 20 : வங்கதேசம் - ஆப்கானிஸ்தான்

Story first published: Wednesday, July 25, 2018, 9:57 [IST]
Other articles published on Jul 25, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+