Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆப்கானிஸ்தான் அறிமுக டெஸ்ட்.... இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள்!

Recommended Video

ஆப்கானிஸ்தான் டெஸ்ட்....இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள்!- வீடியோ

டெல்லி: ஆப்கானிஸ்தான் அறிமுகமாகும் டெஸ்ட் போட்டியில் நீண்ட அனுபவம் உள்ள இந்தியாவுக்கு, ரஷீத் கான் உள்பட மூன்று முக்கிய சவால்கள் காத்திருக்கின்றன.

இந்தியா உள்பட 10 நாடுகள், டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் நாடுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் டெஸ்ட் போட்டி அந்தஸ்தை பெற்றுள்ளன. அயர்லாந்து அணி தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடியது.

ஆப்கானிஸ்தான் அணி, வரும் 14ல் பெங்களூருவில் நடக்கும் போட்டியில், இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகிறது.

விராட் கோஹ்லி இல்லாத நிலையில் கேப்டன் அஜங்யா ரஹானே தலைமையில் இந்திய அணி களமிறங்க உள்ளது. ஒருதினப் போட்டிகள் மற்றும் டி-20 போட்டிகளில் வேகமாக வளர்ந்து வரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த டெஸ்டில் இந்திய அணிக்கு மூன்று முக்கிய சவால்கள் காத்திருக்கிறது.

துவக்க வீரர் யார்

துவக்க வீரர் யார்

ஷிகார் தவான், கேஎல் ராகுல் மற்றும் முரளி விஜய் என, மூன்று பேர் துவக்க வீரர்கள் இருந்தாலும், இந்திய அணிக்கு நிலையான துவக்க ஆட்டக்காரர் யார் என்பதில் இன்னும் குழப்பம் உள்ளது. முரளி விஜய் நல்ல பார்மில் உள்ளதால், அவர் துவக்க வீரராக களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதி. அவருடன் சேரப்போவது யார் என்பதில் பெருங்குழப்பம் உள்ளது.

நிரூபிப்பாரா தினேஷ் கார்த்திக்

நிரூபிப்பாரா தினேஷ் கார்த்திக்

மிக நீண்ட அனுபவம் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார். அவர் கடைசியாக 2010ல் விளையாடினார். டெஸ்ட் போட்டியில் அவர் தன்னை நிரூபிப்பதற்கான டெஸ்டாக இந்த போட்டி உள்ளது. ஒருவேளை அவர் நிரூபித்தால், சாகாவுக்கு பதிலாக டெஸ்ட் அணிக்கான விக்கெட் கீப்பராக தொடருவாரா என்பதும் இந்த டெஸ்ட் போட்டியில் தெரியவரும்.

மிகப் பெரிய சவால்

மிகப் பெரிய சவால்

முதல் இரண்டு பிரச்னைகளும் இந்திய அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. அதே நேரத்தில் வளர்ந்து வரும் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் மிகப் பெரிய சவாலாக இருப்பார். டி-20 போட்டிக்கான தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ரஷீத் கான், சமீபத்தில் ஐபிஎல்லில் பின்னி எடுத்தார். வங்கதேசத்துக்கு எதிரான தொடரிலும் அசத்தினார். அவரை சமாளிப்பதுதான் இந்திய அணிக்கு மிகப் பெரிய பிரச்னையாக இருக்கும்.

சாதிக்குமா ஆப்கன்

சாதிக்குமா ஆப்கன்

பெங்களூர் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானது. ரஷீத் கான் உள்பட 5 சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆப்கானிஸ்தான் வருகிறது. இதுவரை எந்த அணியும் அறிமுகப் போட்டியில் வென்றதில்லை என்பது வரலாறு. அந்த வரலாற்றை மாற்றி அமைக்காமல் ஆப்கானிஸ்தானை தடுத்து நிறுத்துவது டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணிக்கு உள்ள மிகப் பெரிய சவால்.

Story first published: Sunday, June 10, 2018, 13:08 [IST]
Other articles published on Jun 10, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+