For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பெர்த் ஆடுகளத்தால் இந்தியாவுக்கு குழப்பம்.. தென்னாப்பிரிக்காவை சமாளிக்க பிளேயிங் லெவனில் மாற்றம்?

பெர்த் : டி20 உலககோப்பையில் இந்தியா தனது அடுத்த லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை பெர்த் நகரில் எதிர்கொள்கிறது.

இந்தியா விளையாடிய பெல்போன், சிட்னி ஆடுகளத்தை காட்டிலும் பெர்த் ஆடுகளம் முற்றிலும் மாறுப்பட்டதால் இந்தியா பிளேயிங் லெவனில் சில மாற்றத்தை கொண்டு வர வேண்டியுள்ளது.

பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியா, இலங்கை மோதிய போட்டியின் போது சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக பெரிதாக செயல்படவில்லை.

தீபக் ஹூடா

தீபக் ஹூடா

அதே சமயத்தில் வேகப்பந்து வீச்சுக்கு நல்ல ஒத்துழைப்பு இருந்ததையும் காண முடிந்தது. எனவே இந்த ஆட்டத்திற்கு ஏழாவது இடத்தில் ஒரு ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டர் வேண்டுமா? இல்லை பேட்டிங் ஸ்பின் ஆல்ரவுண்டர் வேண்டுமா? என்றால், இரண்டாவது ஆப்ஷன் தான் சரியானதாக இருக்கும். எனவே அக்சர் படேல் பதிலாக தீபக் ஹூடா கொண்டுவரப்பட்டால் அது சரியான முடிவுதான்

அஸ்வின் முக்கியம்

அஸ்வின் முக்கியம்

தென்ஆப்பிரிக்க அணியின் பெரிய பலம் மூன்று இடதுகை பேட்ஸ்மேன்கள்தான். எனவே அணியில் ஆப் ஸ்பின் அஸ்வின் இருக்கும்பொழுது, பார்ட் டைம் ஆப் ஸ்பின் தீபக் ஹூடா வருவது தவறான ஒன்றாக அமையாது.மேலும் பெர்த் மைதானத்தில் விளையாடும் பொழுது தென் ஆப்பிரிக்கா அணி , இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை எடுத்துக்கொண்டு வந்து விளையாடுவது கடினம்தான்.

4 வேகப்பந்துவீச்சாளர்கள்

4 வேகப்பந்துவீச்சாளர்கள்

நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற அதிக வாய்ப்பு உண்டு. மார்க்கோ யான்சன் கொண்டு வரப்படலாம். எனவே பேட்டிங்கில் ஏழாவது இடத்தில் ஒரு பியூர் பேட்ஸ்மேன் இருப்பது இந்திய அணிக்கு முக்கியமானது.இதனால் பிளேயிங் லெவனில் மாற்றத்தை கொண்டு வர வேண்டிய கட்டாயத்திற்கு ரோகித் தள்ளப்பட்டுள்ளார்.

ரோகித் குழப்பம்

ரோகித் குழப்பம்

ஆனால் நெதர்லாந்துக்கு எதிராக அக்சர் பட்டேல் சிறப்பாக செயல்பட்டார். இதனால், அவரை நீக்கினால், அது அவரது உத்வேகத்தை குலைக்கலாம் என கருதப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 2011 உலககோப்பையில் நடந்தது போல் , தற்போதும் நடப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அப்படி பார்த்தால், கடந்த முறை தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோற்றது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, October 28, 2022, 20:54 [IST]
Other articles published on Oct 28, 2022
English summary
India facing confusion over the nature of Perth pitch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+