
கடந்த உலககோப்பை
இதில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி சூப்பர் சுற்றுக்கு செல்லும். இந்த சுற்றில் , ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு செல்லும். கடந்த முறை, இந்த சுற்றில் பாகிஸ்தான், நியூசிலாந்திடம் தோல்வியை தழுவிய இந்திய அணி தொடரிலிருந்து வெளியேறியது.

குரூப் ஆஃப் டெத்
தற்போது சூப்பர் 6 சுற்றில், இதே போன்று கடினமான அணிகளுடன் இந்தியா சிக்கி கொண்டது. இதனை Group of Death என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். அதாவது, ஒரு போட்டியில் தோற்றால் கூட, நீங்கள் தொடரை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும். அந்த அளவுக்கு அனைத்து அணிகளும் பலமான அணியாக விளங்கும்.

மீண்டும் பாகிஸ்தான்
சூப்பர் 6 சுற்றில் இந்திய அணி குரூப் 2 வில் இடம் பிடித்துள்ளது. இதில் இந்திய அணி, பலம் வாய்ந்த பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. கடந்த முறை எப்படி முதல் போட்டியில் சந்தித்தோமோ, அதே போல் இம்முறையும் வாய்ப்புகள் உருவாகி உள்ளது. இதே போன்று பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை இந்தியா சந்திக்க இருக்கிறது.

காத்திருக்கும் அபாயம்
3வது அணியாக வங்கதேசத்துடன் இந்தியா மோத உள்ளது. கடந்த 2016 உலகக் கோப்பையின் போது இந்தியா எவ்வளவு கஷ்டப்பட்டு வென்றது என்று நமக்கு தெரியும். இதனால் வங்கதேசத்தை சாதாரணமாக கருதி விட முடியாது. அடுத்த 2 போட்டியில் தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் இந்தியா மோத உள்ளது. அதில் குரூப் ஏ வின்னராக வெஸ்ட் இண்டீஸ் வரும் பட்சத்தில், இந்தியா கதை அவ்வளவு தான். இதே போன்று குரூப் பி பிரிவில் இலங்கை ரன்னராக வரும் பட்சத்தில் கடும் சவாலாக இருக்கும். இல்லை, கடவுளின் ஆசி கொஞ்சம் இருந்தால் நெதர்லாந்து அணி வரும்.


Click it and Unblock the Notifications











