Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூப்பர் 12 சுற்றில் இந்தியாவுடன் மோத போகும் 2 அணி?கத்துக்குட்டி அணி வந்தாலும் சிக்கல்? கவனிச்சீங்களா

மெல்போர்ன் : டி20 உலககோப்பை தொடரின் முதல் சுற்று ஆட்டம் இன்றுடன் நிறைவு அடைகிறது. இதன் மூலம் நாளை முதல் பரபரப்பு நிறைந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன.

இந்த நிலையில், சூப்பர் 12 சுற்றில் தற்போது 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன நிலையில், மேலும் 4 அணிகள் எது என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இந்த நிலையில், இதில் இலங்கை அணியும், நெதர்லாந்தும் ரவுண்ட் 1 குரூப் ஏ பிரிவில் இருந்து தகுதி பெற்றுள்ளன.

நெதர்லாந்து தகுதி

நெதர்லாந்து தகுதி

எஞ்சிய 2 அணிகள் எது என்பது குறித்து இன்று மாலை தெரிந்துவிடும். இந்த நிலையில், இந்தியா இடம்பிடித்துள்ள குரூப் 2 பிரிவில் எந்த அணி தகுதி பெற்றுள்ளது என்பதை தற்போது காணலாம். இலங்கைக்கு எதிராக கடைசி ஆட்டத்தில் தோல்வியை தழுவினாலும், நமீபியா அணி யுஏஇவிடம் தோற்றதால், நெதர்லாந்து அணி தனது பிரிவில் 2 வது இடத்தை பிடித்தது. இதன் மூலம் அந்த அணி இந்தியாவின் குரூப்க்கு வந்துள்ளது.

மற்றொரு அணி ?

மற்றொரு அணி ?

இதன் மூலம் வரும் 27ஆம் இந்திய அணி, நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வியாழக்கிழமை மதியம் 12.30 மணிக்கு சிட்னி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில், இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பி 1 அணியை எதிர்கொள்கிறது. அது ஜிம்பாப்வே அல்லது ஸ்காட்லாந்து அணியாக இருக்கலாம்.

பாதகம்

பாதகம்

இந்த நிலையில், இந்தியா இடம் பிடித்துள்ள 2வது குரூப்பில் கத்துக்குட்டி அணிகள் வந்தாலும் அது ஒரு வகையில் ஆபத்தை தான் ஏற்படுத்தும். இந்தியா கத்துக்குட்டி அணிகளை எளிதில் வென்று விடுகிறது, ஆனால் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியை தழுவி விட்டது என்று வைத்து கொள்வோம். அப்போது பாகிஸ்தான், தென்னாப்பிரிக்க அணிகளுக்கும் இந்த கத்துக்குட்டி அணியை வீழ்த்துவது எளிதாக இருக்கும்.

பலமான அணிகளால் சாதகம்

பலமான அணிகளால் சாதகம்

இதன் மூலம் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்கு சென்றுவிடும். அதுவே, இலங்கை அல்லது வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகள் பி பிரிவில் இருந்தால், அது ஒரு விதத்தில் சாதகமாக அமையும். ஏன் என்றால் 2 போட்டியில் தோற்றால் கூட, இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு இருக்கும். காரணம் இந்தியாவை வீழ்த்திய அணிகள், இலங்கை அல்லது வெஸ்ட் இண்டீஸ் இடம் தோற்க வாய்ப்புள்ளது.

கடந்த முறை

கடந்த முறை

கடந்த முறை, இதே போல் தான் பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, நமீபியா,ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பிடித்தன. இதில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்திடம் தோல்வியை தழுவி, மற்ற 3 அணிகளிடம் பெரிய வெற்றி பெற்றது. அப்போது, ஆப்கானிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இருந்தால் இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு ரன் ரேட் அடிப்படையில் கிடைத்திருக்கும். அதனால் தான் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் போன்ற ஏதேனும் ஒரு பலமான அணி கூடுதலாக இருந்தால், இந்தியா 2 தோல்வியை பெற்ற பிறகும் அரையிறுதிக்கு போகலாம். தற்போது, இந்திய அணி, பாகிஸ்தான், அல்லது தென்னாப்பிரிக்கா என எதேனும் ஒரு அணியை கண்டிப்பாக வீழ்த்த வேண்டும்.

Story first published: Friday, October 21, 2022, 10:02 [IST]
Other articles published on Oct 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+