Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏன் மயில்வாகனம், நம்ம வீரர்கள் தோத்ததுக்கு அவங்களோட மனைவியரும், தோழியரும்தான் காரணமாமே!?

டெல்லி: இந்திய வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியபோது அவர்களது மனைவியரும், தோழியரும் திசை திருப்பலாக இரு்நது விட்டனர். இதுதான் டெஸ்ட் போட்டிகளில் நமது வீரர்கள் சரிவர விளையாடாமல் போனதற்கு முக்கியக் காரணம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

விராத் கோஹ்லியின் காதலியான நடிகை அனுஷ்கா சர்மா கிட்டத்தட்ட இங்கிலாந்திலேயே டேரா போட்டு உட்கார்ந்திருந்தார். எப்போது பார்த்தாலும் கோஹ்லியுடன்தான் சுற்றித் திரிந்தார். இந்தத் தொடரில் பெரிய அளவில் சொதப்பியவரும் கோஹ்லி மட்டுமே.

நமது வீரர்கள் விளையாட நினைத்தாலும் அவர்களை விளையாட முடியாதபடி குழப்பி, திசை திருப்பி விட்டனர் அவர்களது மனைவிமார்களும், காதலியரும் என்று கூறியுள்ளார் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர்.

துணையுடன் போகலாம்

துணையுடன் போகலாம்

இங்கிலாந்து தொடருக்கு இந்திய அணி கிளம்பியபோது வீரர்களுடன் மனைவியரும் செல்ல வாரியம் அனுமதி கொடுத்திருந்தது.

போன இடத்தில் படு தோல்வி

போன இடத்தில் படு தோல்வி

இதனால் குஷியாகக் கிளம்பிப் போனார்கள் வீரர்களும். ஆனால் போன இடத்தில் 3-1 என்ற கணக்கில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா இழந்து விட்டது. கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

நம்பர் ஒன் சொதப்பல் கோஹ்லிதான்

நம்பர் ஒன் சொதப்பல் கோஹ்லிதான்

இந்திய அணி வீரர்களிலேயே மிகப் பெரிய சொதப்பல் விராத் கோஹ்லிதான். இவரை மலை போல நம்பியிருந்தது அணி. ஆனால் மடு அளவுக்குக் கூட இவர் விளையாடவில்லை.

2 டக்கு.. 134 ரன்

2 டக்கு.. 134 ரன்

10 இன்னிங்ஸ்களில் மொத்தமே 134 ரன்கள்தான் எடுத்தார் கோஹ்லி. இதில் 2 முறை டக் அவுட் வேறு ஆனார்.

எப்படி விளையாடிய கோஹ்லி

எப்படி விளையாடிய கோஹ்லி

இத்தனைக்கும் கோஹ்லி, ஒரு நாள் போட்டிகள், டுவென்டி, டெஸ்ட் என கலக்கலாக ஆடியவர். அதிக அளவில் ரன்களையும் குவித்தவர்தான். ஆனால் இங்கிலாந்தில் அவரால் முடியவில்லை.. காரணம் காதலி அனுஷ்கா சர்மா.

அனுஷ்காவுக்கு ஸ்பெஷல் பெர்மிஷன்!

அனுஷ்காவுக்கு ஸ்பெஷல் பெர்மிஷன்!

விராத் கோஹ்லி தன்னுடன் காதலி அனுஷ்காவையும் அழைத்துச் செல்ல சிறப்பு அனுமதி கோரியிருந்தாராம் வாரியத்திடமும். வாரியமும் பச்சைக் கொடி காட்டி விட்டது.

போன இடத்தில் சுற்றுலா

போன இடத்தில் சுற்றுலா

ஆனால் போன இடத்தில் விளையாடிய நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் அனுஷ்காவுடன்தான் இருந்துள்ளார் கோஹ்லி. வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில்தான் அனுஷ்காவும் தங்கியுள்ளார்.. பிறகெப்படி!

திருமதிகளுடன் போன திருவாளர்கள்

திருமதிகளுடன் போன திருவாளர்கள்

அதேபோல அஸ்வின், சட்டேஸ்வர் புஜாரா, முரளி விஜய், ஸ்டூவர்ட் பின்னி, கெளதம் கம்பீர் ஆகியோர் வாரியத்திடம் அனுமதி பெற்று தங்களது மனைவிகளையும் அழைத்துச் சென்றனர். இவர்களில் விஜய், பின்னி சற்றுப் பரவாயில்லை. கொஞ்சமாவது விளையாட்டைக் காட்டினார்கள்.

ஊர் சுற்ற விரும்பிய மனைவிகள்

ஊர் சுற்ற விரும்பிய மனைவிகள்

இதுகுறித்து கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், டெஸ்ட் தொடர் முழுவதும் மனைவியரும், தோழியரும் கூடவே இருந்ததால், வீரர்களால் விளையாட முடியாமல் போனது. அவர்கள் பிராக்டிஸ் செய்ய நினைத்தாலும் இவர்கள் விடுவதில்லை. ஊர் சுற்றப் போகலாம் வாருங்கள் என்று அணத்தியுள்ளனர். பிறகெப்படி வீரர்களால் கவனமாக ஆட முடியும்.

கண்ணு திறந்திருச்சு சாமி...!

கண்ணு திறந்திருச்சு சாமி...!

இங்கிலாந்து தொடர் எங்களது கண்களைத் திறந்துள்ளது. இனிமேல் கட்டுப்பாடு காப்போம். வீரர்களுடன் எவ்வளவு நாட்களுக்கு மனைவியர் உடன் இருக்கலாம் என்பது குறித்து இனி வரையறை நிர்ணயிக்கப்படும். வேறு வழியில்லை என்றார் அவர்.

ஒரு நாள் தொடரிலாவது...

ஒரு நாள் தொடரிலாவது...

இதோ அடுத்து ஒரு நாள் தொடர் வந்து விட்டது. ஒரு டுவென்டி 20 போட்டியும் வருகிறது.

எனவே "ஆல் மேடம்ஸ்".. ஸ்டேடியத்தில் ஒரு ஓரமாக உட்கார்ந்து "புள்ளைகளை" நல்லா விளையாட விட்டு வேடிக்கை பாருங்கம்மா... புண்ணியமாப் போகும்.!

Story first published: Thursday, August 21, 2014, 12:47 [IST]
Other articles published on Aug 21, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+