Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆப்கனை குறைத்து எடை போட்ட இந்தியா.. அணித்தேர்வில் அசால்ட்டா இருக்கலாமா?

Recommended Video

ஆப்கனை குறைத்து எடை போட்ட இந்தியா...அணித்தேர்வில் அசால்ட்டா இருக்கலாமா?- வீடியோ

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில், இந்தியா, ஆப்கானிஸ்தான் தங்கள் கடைசி போட்டியில் ஆடின.

அதில் ஆப்கானிஸ்தான் அணி அருமையாக செயல்பட்டது. பந்துவீச்சு பேட்டிங் இரண்டிலும் கலக்கிய அந்த அணி போட்டியை டை செய்தது.

இந்தியா ஒரு கட்டத்தில் எளிதாக வெற்றி பெறும் என்ற நிலையில் இருந்தாலும், ஆப்கனின் பந்துவீச்சு இந்தியாவை டை செய்ய மட்டுமே அனுமதித்தது. நேற்று இந்தியா இப்படி மோசமாக ஆட என்ன காரணம்?

முக்கிய வீரர்கள் ஓய்வு

முக்கிய வீரர்கள் ஓய்வு

நேற்று இந்திய அணியில் முக்கிய வீரர்கள் ஐந்து பேருக்கு ஒய்வு கொடுக்கப்பட்டது. ரோஹித் சர்மா, தவான், சாஹல், புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகியோர் ஓய்வெடுக்க, இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் அணியில் இருந்தும், களத்தில் ஆடும் வாய்ப்பு இல்லாமல் இருந்தவர்கள். எனவே, அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அணித் தேர்வில் தவறு

அணித் தேர்வில் தவறு

இந்தியா ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், வெற்றி தோல்வி முக்கியமில்லை என்றாலும், ஆப்கன் அணியை குறைத்து எடை போட்டு, முக்கிய வீரர்களை ஓய்வில் அனுப்பிவிட்டு இளம் வீரர்களோடு களம் இறங்கியது இந்திய அணி. இதற்கு முன் நடந்த போட்டிகளில் துவக்க வீரர்களே பெரும்பாலும் ரன் குவித்து வெற்றியை பெற்றுக் கொடுத்து வந்ததால், இந்திய அணியின் மிடில் ஆர்டர் அதிக பேட்டிங் வாய்ப்பு பெறாமல் இருந்தது. அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த முடிவு இருந்தாலும், ஒரேடியாக ஐந்து முக்கிய வீரர்கள் இல்லை என்பது தவறான முடிவு தான்.

இந்தியா பந்துவீச்சில் சொதப்பல்

இந்தியா பந்துவீச்சில் சொதப்பல்

முக்கியமாக நேற்று இந்தியா பந்துவீச்சில் சொதப்பியது. ஒரு பக்கம் இந்தியா விக்கெட்கள் எடுத்து வந்தாலும், மறுபுறம் ஆப்கன் ரன் குவிப்பை இந்திய பந்துவீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆப்கன் துவக்க வீரர் ஷாசாத் 7 சிக்சர்கள் அடித்து சதம் கடந்தார். அவரை வெளியேற்ற முடியாமல் இந்திய பந்துவீச்சு தடுமாறியது. இதற்கு காரணம், முக்கிய வீரர்கள் புவனேஸ்வர் மற்றும் பும்ரா இல்லாதது தான். தன் முதல் போட்டியில் ஆடிய தீபக் சாஹர் நேற்று படு மோசமாக வீசினார். 4 ஓவர்கள் மட்டுமே வீசிய அவர் 37 ரன்கள் கொடுத்தார். சித்தார்த் கவுலும் அதிக ரன்கள் கொடுத்தார். கேதார் ஜாதவ் இருந்ததால், தீபக் சாஹருக்கு ஓவரை குறைத்து இந்தியா நேற்று தப்பியது. 180 ரன்களுக்கு 6 ரன்கள் இழந்து இருந்த ஆப்கானிஸ்தான் இறுதியில் 252 ரன்கள் குவித்தது.

தொடரும் மிடில் ஆர்டர் சோகம்

தொடரும் மிடில் ஆர்டர் சோகம்

இந்திய அணி மிடில் ஆர்டரில் சரியில்லை என்பது நேற்று மீண்டும் ஒருமுறை நிரூபணமானது. மனிஷ் பாண்டே மோசமான முறையில் ஆட்டமிழந்தார். இதில் இந்தியா நேற்று துரதிர்ஷ்டமான முறையில் மூன்று விக்கெட்களை இழந்தது. ஒன்று ஜாதவின் ரன் அவுட். தினேஷ் கார்த்திக் நேராக அடித்த பந்து எதிர் திசை விக்கெட்டில் பட்டது. அப்போது ரன் ஓட தயாராக இருந்த ஜாதவ் சில அடிகள் முன்னேறி இருந்தார். அதனால், ரன் அவுட் ஆனார் அவர். மற்ற இரண்டும், அம்பயர் கொடுத்த தவறான தீர்ப்பினால் வந்தது. தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் இருவருக்கும் தவறான LBW அவுட் கொடுத்தார் அம்பயர்.

Story first published: Wednesday, September 26, 2018, 10:53 [IST]
Other articles published on Sep 26, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+