Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னங்க இவ்வளவு மோசமா பண்றீங்க.. சொதப்பல் ஃபில்டிங்கால் தோற்ற இந்தியா.. தெ.ஆப்பிரிக்கா திரில் வெற்றி

பெர்த் : டி20 உலககோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி மோசமான ஃபில்டிங் செய்தது.

முதலில் டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் 40 பந்தில் 68 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் பேட்டிங்கில் சொதப்பினர்

134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 3 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

தடுமாற்றம்

தடுமாற்றம்

ஆர்ஸ்திப் பந்துவீச்சில் குயின்டன் டி காக் 1 ரன்னிலும், ரூசோவ் டக் அவுட்டாகியும் ஆட்டமிழக்க,பெவமா 10 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஏய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர் ஜோடி இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 10 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 43 ரன்கள் மட்டுமே எடுத்தது.

திருப்புமுனை

திருப்புமுனை

இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்க தொடங்கினர். அப்போது 11வது ஓவரில் ஹர்திக் பாண்டியா வீசினார். இதனை பயன்படுத்தி கொண்ட தென்னாப்பிரிக்க வீரர்கள், 16 ரன்களை குவித்தனர்.இதனையத் தொடர்ந்து 12வது ஓவரைஅஸ்வின் வீசினார்.

கோலி கேட்ச் மிஸ்

கோலி கேட்ச் மிஸ்

இதில் தான் பெரிய டிவிஸ்டே நடந்தது. அஸ்வின் வீசிய பந்தை ஏய்டன் மார்க்ரம் அடிக்க முயன்றார். அப்போது பந்து நேராக விராட் கோலியிடம் சென்றது. ஆனால், விராட் கோலி கையிலிருந்து பந்து வெளியே செல்ல, அவர் கேட்சை மிஸ் செய்தார். இது ஆட்டத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

ரன் அவுட் மிஸ்

ரன் அவுட் மிஸ்

இதனைத் தொடர்ந்து அடுத்த ஓவரில் முகமது ஷமி அபாரமாக பந்துவீசி, ரன்களை கட்டுப்படுத்தினார். அப்போது மில்லர் அருகிலேயே அடித்து விட்டு ஓடினார்.இதனை பிடித்த ரோகித் சர்மா, ஸ்டம்பை குறி பார்த்து அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு, ரன் அவுட் வாய்ப்பை மிஸ் செய்தார். இந்த 2 வாய்ப்பையும் பயன்படுத்தி கொண்ட மில்லர், மார்க்கரம் ஜோடி அதிரடியாக விளையாடினர்.

தென்னாப்பிரிக்க வெற்றி

தென்னாப்பிரிக்க வெற்றி

மார்க்கரம் 41 பந்தில் 52 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். கடைசி 3 ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது அஸ்வின் வீசிய 2 பந்தில் 2 சிக்சர்கள் போக, அது தென்னாப்பிரிக்காவுக்கு சாதகமாக மாறியது. எனினும் அந்த ஓவரில் ஸ்டப்ஸ் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். இதனால் 12 பந்துக்கு 12 ரன்கள் என தேவைப்பட்ட நிலையில், முகமது ஷமி அந்த ஓவரில் 6 ரன்களை மட்டுமே விட்டு கொடுக்க, கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. இதில் புவனேஸ்வர் குமார் வீசிய ஷாட் பாலை மில்லர் பவுண்டரி விளாச, தென்னாப்பிரிக்க அணி 2 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி பெற்றது. இந்தியாவின் தோல்விக்கு மோசமான ஃபில்டிங் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, October 30, 2022, 20:36 [IST]
Other articles published on Oct 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+