Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நொந்து நூடுல்ஸ் ஆகியுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி

லண்டன்: ஏற்கனவே தோற்று நொத்து போயுள்ள இந்திய அணிக்கு, நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் பந்து வீசவில்லை என்ற குற்றச்சாட்டுக்காக ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

இங்கிலாந்தில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய அணி, அதில் 3ல் தோற்று தொடரை கைநழுவ விட்டது. ஓவல் மைதானத்தில் நேற்று முன்கூட்டியே முடிந்த டெஸ்ட் போட்டியில், இந்தியா இன்னிங்ஸ் தோல்வியடைந்தது.

மெதுவாக பந்து வீச்சு

மெதுவாக பந்து வீச்சு

இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் எடுத்து இந்திய அணி பந்து வீசியதாக ஐசிசி நடுவர் ரஞ்சன் மதுகலே குற்றம்சாட்டியுள்ளார்.

ஐசிசி விதி என்ன சொல்கிறது என்றால்...

ஐசிசி விதி என்ன சொல்கிறது என்றால்...

ஐசிசி விதி முறைகள் படி தாமதமாக்கப்பட்ட ஒவ்வொரு ஓவருக்கும் போட்டி சம்பளத்தில் இருந்து வீரர்களிடம் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். கேப்டனிடம் இது இரட்டிப்பாக வசூலிக்கப்படும்.

மூன்று ஓவர் குறைவு

மூன்று ஓவர் குறைவு

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட, இந்திய அணி 3 ஓவர்கள் தாமதமாக வீசியுள்ளதால், வீரர்களுக்கு 30 சதவீத அபராதமும், கேப்டன் டோணிக்கு 60 சதவீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

டோணிக்கு தடையா?

டோணிக்கு தடையா?

இந்தாண்டில் மீண்டும் ஒருமுறை இதுபோல தாமதமாக பந்து வீசினால், இந்திய அணி கேப்டன் டோணிக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்க ஐசிசி சட்டத்தில் இடமுள்ளது.

இந்த பிரச்சினை வேறா....

இந்த பிரச்சினை வேறா....

ஐசிசியின் இந்த தீர்ப்பை எதிர்க்கப்போவதில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஏற்கனவே நொந்து நூடுல்ஸ் ஆகிப்போயுள்ள நிலையில், சம்பளத்திலும் கைவைத்துவிட்ட வயிற்றெரிச்சலில் உள்ளனர் இந்திய கிரிக்கெட் வீரர்கள்.

Story first published: Monday, August 18, 2014, 14:16 [IST]
Other articles published on Aug 18, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+