Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு எதிராக என்ன செய்வார் டேல் ஸ்டெயின்? கொஞ்சம் இக்கட ச்சூடு கண்ணா..!

மெல்போர்ன்: உலக கோப்பையில் நாளை இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையேயான லீக் போட்டி நடைபெற உள்ளது. தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் பற்றிதான் இந்திய அணி வீரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாக தெரிகிறது. சச்சின் டெண்டுல்கரும், ஸ்டெயினிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அபாய மணி அடித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக அப்படி என்னதான் செய்வார் ஸ்டெயின்.. என்ற அலட்சியம் இருக்குமாயின், முந்தைய சாதனைகளை ஒரு எட்டு போய் பார்த்துவிட்டு வருவது நலம்.

India gear up to face Proteas pace battery

இந்தியா-ஸ்டெயின் நடுவேயான சில புள்ளி விவரங்கள் இதோ உங்கள் பார்வைக்கு:

இந்தியாவுக்கு எதிராக ஸ்டெயின் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் ஸ்டெயின் பவுலிங் சராசரி 25.4 ஆக உள்ளது. ஆனால், இந்தியாவுக்கு எதிராக 19.17தான் அவரது சராசரி. அதாவது, இந்தியாவுக்கு எதிராக சராசரியாக 19 ரன்களுக்கு 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார் ஸ்டெயின்.

சர்வதேச கிரிக்கெட்டில் ஸ்டெயின் ஸ்டிரைக் ரேட் 31.6 ஆக உள்ளது. அதாவது, சராசரியாக 32 பந்துகளில் ஒரு விக்கெட்டை வீழ்த்துகிறார் ஸ்டெயின். ஆனால் இந்தியாவுக்கு எதிராக சராசரியாக 25 பந்துகளுக்கு ஒரு விக்கெட் என்ற விகிதத்தை ஸ்டெயின் வைத்துள்ளார்.

ஸ்டெயினின் ஒட்டுமொத்த ரன் சராசரி 4.82 ஆக உள்ளது. ஆனால் இந்தியாவுக்கு எதிராக அதிலும் ஸ்டெயின் சிக்கனம்தான். ஓவருக்கு 4.54 ரன்களைத்தான் சராசரியாக விட்டுக்கொடுத்துள்ளார்.

97 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டெயின் 152 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இதில் இந்தியாவுக்கு எதிராக 12 போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுகளை சாய்த்ததும் அடங்கும்.

இதற்கு முந்தைய சீரிசில் (2013 டிசம்பர்) இந்தியாவுக்கு எதிராக 2 போட்டிகளில் விளையாடிய ஸ்டெயின் வெறும் 30 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

கடந்த சீரிசில் இந்தியாவின் டாப் பேட்ஸ்மேன்கள் ஸ்டெயினை எப்படி எதிர்கொண்டனர் என்பதை பார்த்தோமானால், அதிலும் அவரின் கையே ஓங்கியுள்ளது தெரியும். ஷிகர் தவான் 2 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டெயின் பந்தில் அவுட் ஆகியுள்ளார்.

ரோகித் ஷர்மா 29 பந்துகளை சந்தித்து 10 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதில் முதல் 15 பந்துகள் ரோகித் ஷர்மாவின் பேட்டில் படாமலே விக்கெட் கீப்பரிடம் சென்ற சோகமும் அடங்கும். விராட் கோஹ்லி மட்டுமே கொஞ்சம் பரவாயில்லை. 15 பந்துகளை சந்தித்து 11 ரன்களை எடுத்துள்ளார். இவ்விருவரும் கடந்த சீரிசின்போது ஸ்டெயின் பந்து வீச்சில் அவுட் ஆனதில்லை.

Story first published: Saturday, February 21, 2015, 16:25 [IST]
Other articles published on Feb 21, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+