For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பெங்களூர் டெஸ்ட்: 75 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா! 2வது இன்னிங்சில் புஜாரா, அஸ்வின் அபாரம்

பெங்களூர் டெஸ்டில் ஆஸ்திரேலியாவை 75 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. 188 ரன்களை இலக்காக விரட்டிய ஆஸ்திரேலியா 112 ரன்களில் சுருண்டது.

By Veera Kumar

பெங்களூர் டெஸ்டில் ஆஸ்திரேலியாவை 75 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. 188 ரன்களை இலக்காக விரட்டிய ஆஸ்திரேலியா 112 ரன்களில் சுருண்டது.

பெங்களூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் இன்னிங்சில் முடங்கிப் போன இந்திய அணி, 2வது இன்னிங்சில் கடும் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது. இதனால் இந்த டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது.

புனே டெஸ்டில் படுதோல்வியடைந்த இந்தியா, பெங்களூரில் தொடங்கிய 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சிலும் சோடை போனது. டாசில் வென்று முதலில் பேட் செய்த போதிலும், 189 ரன்களுக்கு படுத்துவிட்டது இந்திய அணி.

முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா மொத்தம் 276 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை ஆரம்பித்த இந்தியாவுக்கு மீண்டும் சறுக்கல்தான் காத்திருந்தது. 120 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்சை போலவே தடுமாறியது இந்தியா.

 புஜாரா-ரஹானே ஜோடி

புஜாரா-ரஹானே ஜோடி

ஆனால் 5வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் ஜோடி சேர்ந்த அஜிங்ய ரஹானே, இணை அணியை சரிவில் இருந்து மெல்ல, மெல்ல மீட்டது. நேற்றைய ஆட்ட நேர இறுதியில், இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 79 ரன்களுடனும், ரஹானே 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 250 ரன்கள் முன்னிலை பெற்றால் கூட அதை கடைசி இன்னிங்சில் விரட்டி பிடிப்பது என்பது இந்திய பிட்சுகளில் அசாத்தியம். எனவே அப்படி ஒரு பார்ட்னர்ஷிப்பை இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

 திடீர் தடுமாற்றம்

திடீர் தடுமாற்றம்

ஆனால், ரஹானே 52 ரன்களில் எல்பிடபிள்யூ முறையிலும், புஜாரா 92 ரன்களிலும் நடையை கட்டினர். கருண் நாயர் ஒரு பந்தை சந்தித்து டக்-அவுட்டானார். அஸ்வின் 4 ரன்களில் வெளியேறினார். இந்திய அணி 86 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகளை இழந்து 246 ரன்களை எடுத்திருந்தது. கடைசி 11 ரன்களை சேர்ப்பதற்குள் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.

 சாஹா அபாரம்

சாஹா அபாரம்

இருப்பினும் விக்கெட் கீப்பர் விருதிமான் சாஹா, டெய்ல் என்டர்களுடன் போராட்டம் நடத்தி ரன் சேர்த்தார். இந்தியா 274 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. 20 ரன்களுடன் களத்தில் நின்றார் சாஹா. ஆனால், உமேஷ் யாதவும், இஷாந்த் ஷர்மாவும் பார்ட்னர்ஷிப் கொடுத்திருந்தால் சாஹா இன்னும் கவுரமான நிலைக்கு ஸ்கோரை உயர்த்தியிருப்பார். ஆனால் அவ்விருவரும் மோசமான ஷாட்டுகளை ஆடி அவுட்டாகினர்.

 இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இருப்பினும் பெங்களூர் பிட்ச் முழுக்க சுழற்பந்துக்கு எடுபட்டதால் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி கனவு எளிதில் நிறைவேறாது என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல நடந்து 112 ரன்களில் அந்த அணி ஆல்-அவுட்டானது. அஸ்வின் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை சாய்த்தார். உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் ஷர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Story first published: Tuesday, March 7, 2017, 16:22 [IST]
Other articles published on Mar 7, 2017
English summary
India getting good partnership against Australia and need to be careful here. Still think 300 will be needed. And time not a factor.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+