Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI 1st test - இந்திய அணியில் 2 வீரர்கள் அறிமுகம்.. ரோகித் சர்மாவுக்கு பாதகமாக விழுந்த டாஸ்

டோமினிக்கா : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆடுகளம் தொய்வாக இருக்கும் என்பதால், வெஸ்ட் இண்டீஸ் இந்த முடிவை எடுத்துள்ளது.

எனினும் மழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருப்பதால் , முதல் ஒரு மணி நேரம் பேட்டிங் செய்ய கடினமாக இருக்கும். இதனால், இந்திய வீரர்கள் கவலைப்பட தேவையில்லை. இதனால் முதலில் பந்துவீசும் இந்திய அணி, வெஸ்ட் இண்டீசை 150 ரன்களில் சுருட்ட வேண்டும் என்ற உத்வேகத்தில் உள்ளது.

india giving chance to two debutants as west indies won the toss and choose to bat

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி சார்பாக ஜெய்ஷ்வால் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் அறிமுக வீரர்களாக இன்று களமிறங்குகின்றனர். ஜெய்ஸ்வாலுக்கு ரோகித் சர்மாவும், இஷான் கிஷனுக்கு விராட் கோலியும் இந்திய அணிக்கு தொப்பிகளை வழங்கி கவுரவித்தனர்.

இந்த நிலையில், டாசின் போது பேசிய ரோகித் சர்மா, இந்திய அணியில் களமிறங்கும் 2 இளம் வீரர்களும் தங்களது பொழுதை சிறப்பாக கழிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். தொடர்ந்து 2 முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறோம். இதன் மூலம் நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி இருக்கிறோம் என்பதை காட்டுகிறது.

இதே போன்று இந்த புதிய சைக்கிளில் இளம் வீரர்கள் நிறைய பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த தொடருக்காக பார்பிடாசில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடினோம். இங்கு 4 நாட்களுக்கு முன்பு வந்தோம்.ஆனால், மழை காரணமாக எங்களால் சரியாக பயிற்சி செய்ய முடியவில்லை என்று ரோகித் சர்மா கூறினார். 2021ஆம் ஆண்டு முதல் வெஸ்ட் இண்டீஸ் தனது சொந்த மண்ணில் ஒரு தொடரை கூட தோற்றது இல்லை.

பிளேயிங் லெவன் 1, ஜெய்ஷ்வால், 2, ரோகித் சர்மா, 3, சுப்மன் கில், 4, விராட் கோலி, 5, ரஹானே, 6, இஷான் கிஷன், 7, ஜடேஜா, 8, அஸ்வின், 9, ஷர்துல் தாக்கூர், 10, முகமது சிராஜ், 11, உனாட்கட்

Story first published: Wednesday, July 12, 2023, 19:23 [IST]
Other articles published on Jul 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+