Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ICC ஒருநாள் தரவரிசை பட்டியல்.. முதலிடம் பிடிக்க இந்தியாவுக்கு செம வாய்ப்பு.. இதை செய்தால் போதும்

ஆக்லாந்து : சர்வதேச அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி உலக கோப்பையில் தோற்றும், தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

இதேபோன்று ஒரு நாள் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் நியூசிலாந்த அணி முதல் இடத்திலும், இந்திய அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.

இதை போன்று டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் இருக்கிறது.

முதலிடம்

முதலிடம்

தற்போது இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கு முன்பு இந்திய அணி 112 புள்ளிகளுடனும், நியூசிலாந்து 114 புள்ளிகளும் இருக்கிறது. இதனால் இந்திய அணிக்கு முதலிடம் பிடிக்கும் வாய்ப்பு மிகவும் எளிதாக உள்ளது.

என்ன செய்யனும்

என்ன செய்யனும்

அதாவது நியூசிலாந்துக்கு எதிரான தொடரை மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றினால் இந்திய அணி தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும். ஒருவேலை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வென்றால் இந்திய அணி இரண்டாவது இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த தொடரில் இந்திய அணி முழுமையாக இளம் வீரர்களை வைத்து களம் காண்கிறது.

இளம் படை

இளம் படை

இதில் ஷிகர் தவான் கேப்டனாக பொறுப்பு ஏற்றிருக்கிறார். விராட் கோலி ,ரோகித் சர்மா, ராகுல், பும்ரா உள்ளிட்ட சீனியர்கள் இல்லாமல் களமிறங்குவதால் அடுத்த தலைமுறைக்கான இந்திய அணி வீரர்கள் இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக சஞ்சய் சாம்சன், உம்ரான் மாலிக், ஆர்ஸ்தீப் சிங் போன்ற இளம் வீரர்களுக்கு இந்த தொடர் ஒரு வரப் பிரசாதமாக அமைந்துள்ளது.

 ஆடுகளம் எப்படி

ஆடுகளம் எப்படி

நியூசிலாந்து மைதானங்களை பொறுத்தவரை பேட்டிற்கு பந்து நன்றாக வரும்.இதனால் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே இந்திய அணி வீரர்கள் ரன் குவிக்க வாய்ப்பு இருக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வெள்ளிக்கிழமை இந்திய நேரப்படி காலை 7:00 மணிக்கு தொடங்கும். இந்த போட்டியை அமேசான் பிரைம் வீடியோவில் நேரலையில் காசு கட்டி இருந்தால் காணலாம்.

Story first published: Wednesday, November 23, 2022, 23:25 [IST]
Other articles published on Nov 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+