முதல் டெஸ்ட் 1932ல்.. முதல் வெற்றியோ 1952ல்.. இதுதாண்டா இந்தியா! #india500
சென்னை: 500வது டெஸ்ட் போட்டியில் இந்தியா காலெடுத்து வைக்கவுள்ள நிலையில், இந்தியாவின் முதல் டெஸ்ட் போட்டி குறித்த சுவாரஸ்யத்தைத் திரும்பிப் பார்க்கலாம்.
உலக அளவில் அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடிய 4வது அணியாக இந்தியா தற்போது விளங்குகிறது. உலக அளவில் முதன் முதலில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அணிகள் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும்தான்.
அவர்களுக்குப் பின்னர் மேற்கு இந்தியத் தீவுகளும், இந்தியாவும் அதிக போட்டிகளில் ஆடியுள்ளன. நியூசிலாந்தும் நமக்கு இணையாக வந்து கொண்டிருக்கிறது. இந்தியா தனது முதல் டெஸ்ட் போட்டியை 1932ம் ஆண்டு ஆடியது.

1932ல் முதல் டெஸ்ட்
இந்தியாவின் முதல் டெஸ்ட் போட்டி 1932ம் ஆண்டு நடந்தது. சி.கே.நாயுடுதான் இந்தியாவின் முதல் டெஸ்ட் கேப்டன் ஆவார். லார்ட்ஸ் மைதானத்தில் இந்த டெஸ்ட் போட்டி நடந்தது.

இங்கிலாந்துடன் மோதல்
நாயுடு தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் தனது முதல் டெஸ்ட் போட்டியில் சந்தித்தது. மெட்ராஸுக்கு வந்தவர்கள் எல்ஐசி பில்டிங்கை ஆச்சரியத்துடன் பார்க்கும் நிலையில்தான் அப்போது இந்திய அணி இருந்தது. எனவே இந்தப் போட்டியில் இந்தியாவால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் நல்ல பல பாடங்கள் நமக்குக் கிடைத்தது.

3 நாள் போட்டி
மொத்தம் நான்கு நாட்களைக் கொண்டதாக இந்தப் போட்டி இருந்தது. அதில் ஒரு நாள் ரெஸ்ட். 3 நாட்கள்தான் போட்டியே நடந்தது. இப்போட்டியில் இந்தியா 158 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

முதல் வெற்றி 1952ல்
இப்படியாக தனது முதல் போட்டியை தோல்வியுடன் சந்தித்த இந்தியா தொடர்ந்தும் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்தது. ஒரு நாள் இரண்டு நாள் இல்லை பாஸ்.. கிட்டத்தட்ட 20 வருடம் தோல்விகள் மட்டுமே.

சென்னையில் முதல் வெற்றி
இந்தியாவின் முதல் டெஸ்ட் வெற்றி சென்னையில் அமைந்தது தமிழக ரசிகர்களுக்கும் ஒரு பெருமையானதாகும். சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் இந்தியா, இங்கிலாந்து மோதின. இதில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பெற்றது.

2 சதம்
விஜய் ஹஸாரே தலைமையில் நடந்த இப்போட்டியில் பாலி உம்ரிகர், பங்கஜ் ராய் ஆகியோர் தலா ஒரு சதம் போட்டனர். வினு மங்கட்அபாரமாக பந்து வீசி 12 விக்கெட்களைச் சாய்த்து இந்தியாவுக்கு வெற்றி தேடிக் கொடுத்தார்.


Click it and Unblock the Notifications