Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"141 ஆண்டுகால சாதனை" இந்திய அணிக்கு கிடைத்த அரிய வாய்ப்பு.. ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா இந்தியா?

இந்தூர்: ஆஸ்திரேலிய அணியை 75 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் 141 ஆண்டு கால வரலாற்று சாதனையை இந்திய அணி முறியடிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரின் மூன்றாவது போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 186 ரன்களுக்கு 4 விக்கெட்கள் என வலுவாக இருந்த போதும், இறுதி நேரத்தில் விக்கெட்களை பறிகொடுத்தது. இதனால் 197 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்திய பேட்டிங் சொதப்பல்

இந்திய பேட்டிங் சொதப்பல்

88 ரன்கள் பின் தங்கிய நிலையில் களமிறங்கிய இந்திய அணி, 2வது இன்னிங்ஸிலும் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. வழக்கம் போல் தொடக்க வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வெளிநாடுகளில் தான் தொடக்க வீரர்கள் சொதப்புவார்கள் என்ற காலம் இருந்த நிலையில், தற்போது சொந்த மண்ணிலேயே தொடக்க வீரர்கள் சொதப்பி வருகின்றனர்.

போராடிய புஜாரா

போராடிய புஜாரா

கேப்டன் ரோகித் சர்மா 12 ரன்களுக்கும், சுப்மன் கில் 5 ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேறினர். இதன் பின்னர் வந்த விராட் கோலி 13, ரவீந்திர ஜடேஜா 7, ஸ்ரேயாஸ் 26, கே.எஸ்.பரத் 3 என அடுத்தடுத்து பெவிலியன் திரும்பியதால் இந்திய அணி சரிவில் சிக்கியது. தனி ஆளாக நின்று போராடிய சட்டீஸ்வர் புஜாரா மட்டும் 142 பந்துகளில் 59 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

மூன்றாம் நாள் ஆட்டம்

மூன்றாம் நாள் ஆட்டம்

இறுதியாக இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா அணியின் லயான் அபாரமாக பந்துவீசி 8 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற 76 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாள் ஆட்டம் முடிவடைந்த நிலையில், மூன்றாம் நாளில் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்க உள்ளது.

141 ஆண்டு கால சாதனை

141 ஆண்டு கால சாதனை

சிறிய இலக்கே நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், இந்திய அணி வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவு என்றே கணிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியை 75 ரன்களுக்குள் வீழ்த்தினால் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை குறைந்தபட்சமாக டிஃபெண்ட் செய்யப்பட்ட ரன்களே 85 தான். 1882ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 86 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

77 ரன்களுக்கு ஆல் அவுட்

77 ரன்களுக்கு ஆல் அவுட்

அப்போது இங்கிலாந்து அணியை 77 ரன்களுக்கு சுருட்டியதே இதுவரை சாதனையாக உள்ளது. ஒருவேளை இந்திய அணி வெற்றிபெற்றால், 141 ஆண்டு கால வரலாற்று சாதனை முறியடிக்கும். அதேபோல் இந்திய அணியின் பவுலிங் அட்டாக் மற்றும் பிட்ச்சின் தன்மையை கணக்கில் கொண்டு பார்த்தால், ஆஸ்திரேலிய அணியை ஆல் அவுட் செய்யவும் வாய்ப்புகள் இருக்கிறது.

 2004 மும்பை டெஸ்ட்

2004 மும்பை டெஸ்ட்

ஏனென்றால் 2004ம் ஆண்டு மும்பை நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 107 ரன்களை இலக்காக கொடுத்து ஆஸ்திரேலியா அணியை 93 ரன்களுக்குள் இந்திய அணி சுருட்டியது. இதனால் நாளைய ஆட்டத்தின் முதல் சில ஓவர்களிலேயே ஆட்டத்தில் யார் வெற்றிபெறுவார்கள் என்பது தெரிந்துவிடும். அதேபோல் ஆஸ்திரேலிய அணியின் கவாஜா மற்றும் டிராவிஸ் ஆகியோரை விரைந்து வீழ்த்தினால், இந்திய அணிக்காக வெற்றிவாய்ப்பு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, March 2, 2023, 23:04 [IST]
Other articles published on Mar 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+