Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ராகுல் டிராவிட்க்கு திடீரென்று உடல் நலக்குறைவு.. உடனடியாக பெங்களூரு விரைந்தார்.. என்ன நடந்தது?

பெங்களூரு : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வீரர்களுடன் ஹோட்டலுக்கு சென்றார்.

அப்போது ராகுல் டிராவிட்க்கு இரவில் இருந்து திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு இருக்கிறது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இதனை அடுத்து அணியின் மருத்துவர்கள் ராகுல் டிராவிட்டை சோதித்து மேல் சிகிச்சைக்காக அவரது சொந்த ஊரான பெங்களூருக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. ராகுல் டிராவிட்டுக்கு என்ன சிக்கல் என்று பலரும் சோகத்துடன் இருந்தனர்.

இடைவெளி இன்றி போட்டி

இடைவெளி இன்றி போட்டி

தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்று வருகிறது. மூன்று டி20 போட்டிகளுக்கும் ஒரு நாள் தான் இடைவெளி இருந்தது. இதேபோன்று முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கும் இடையில் ஒரு நாள் மட்டுமே ஓய்வு இந்திய அணி வீரர்களுக்கு இருந்தது. அந்த ஒரு நாளில் கூட போக்குவரத்துக்கு தான் சரியாக இருந்தது.

கடும் நெருக்கடி

கடும் நெருக்கடி

இதனால் இந்திய அணி வீரர்களுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதிக்கும் இப்படி தொடர்ந்து அலைவதால் ராகுல் டிராவிட்டுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் ராகுல் டிராவிட்டுக்கு ரத்த அழுத்த பிரச்சனை தான் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சீரான இரத்த அழுத்தம் இல்லாமல் இருந்ததால் டிராவிட்டுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது.

என்ன பிரச்சினை

என்ன பிரச்சினை

தற்போது பெங்களூருவில் ராகுல் டிராவிட் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். தற்போது அவர் உடல் நலம் சீராகிவிட்டதாகவும் இன்று மாலையோ இல்லை நாளை காலையிலேயோ ராகுல் டிராவிட் இந்திய அணியுடன் திருவனந்தபுரத்தில் கலந்து கொள்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா இலங்கை அணி களுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

Story first published: Friday, January 13, 2023, 16:45 [IST]
Other articles published on Jan 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+