Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்... மீண்டும் நியூசிலாந்த பின்னாடி தள்ளி 2வது இடத்தை பிடித்த இந்தியா

சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் சிட்னியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது.

இதையடுத்து இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் மீண்டும் 2வது இடத்தை பிடித்துள்ளது.

நியூசிலாந்தை பின்னுக்குத் தள்ளி மீண்டும் இதை இந்தியா சாதித்துள்ள போதிலும் இரு அணிகளுக்கும் இடையில் மிகக்குறைந்த புள்ளிகள் வித்தியாசமே காணப்படுகிறது.

டிரா ஆன 3வது டெஸ்ட்

டிரா ஆன 3வது டெஸ்ட்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான சிட்னியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டி டிரா ஆகியுள்ளது. நேற்றைய போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் ரோகித் சர்மா, ரிஷப் பந்த், புஜாரா, அஸ்வின் மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் இதை சாதித்துள்ளனர்.

மீண்டும் 2வது இடத்தில் இந்தியா

மீண்டும் 2வது இடத்தில் இந்தியா

இதையடுத்து போட்டி டிரா ஆனது. இந்த போட்டியில் பெற்றுள்ள புள்ளிகள் அடிப்படையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தற்போது இந்திய அணி 2வது இடத்திற்கு மீண்டும் முன்னேறியுள்ளது. 2வது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி தற்போது 3வது இடத்திற்கு கீழிறங்கியுள்ளது.

ஐசிசி டிவிட்டர் பதிவு

ஐசிசி டிவிட்டர் பதிவு

கடந்த மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர்களில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி இந்தியாவை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. இந்நிலையில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு மீண்டும் தாவியுள்ளது. இதுகுறித்து ஐசிசி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

0.2% வித்தியாசம்

0.2% வித்தியாசம்

ஆயினும் இரு அணிகளுக்கும் இடையில் குறைவான அதாவது 0.2 சதவிகித வித்தியாசமே உள்ளது. இந்நிலையில் பிரிஸ்பேனில் வரும் 15ம் தேதி நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் இந்தியாவின் புள்ளிகள் மேலும் உயரும்.

Story first published: Tuesday, January 12, 2021, 11:48 [IST]
Other articles published on Jan 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+