அகமதாபாத் : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தான் அணியும் பல பரிட்சை நடத்தி வருகிறது. டாஸ் வென்று முதலில் பந்துவீசிய இந்திய அணி பாகிஸ்தானை 191 ரன்கள் எல்லாம் சுருட்டியது.

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 36 பந்துகள் எல்லாம் அரை சதம் கடந்தார். இதில் நான்கு சிக்ஸர்களும் மூன்று பவுண்டரிகளும் அடங்கும்.
இந்த போட்டியை ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள். இதனிடையே இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போதும் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. காரணம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியா பாகிஸ்தான் போட்டியை பார்ப்பதற்காக மைதானத்திற்கு நேரிலே வந்தார். அமித்ஷாவுடன் அவருடைய மனைவி மற்றும் பேத்தி ஆகியோர் வந்திருந்தனர்.

ரசிகர்களுடன் ரசிகர்களாக அமர்ந்து போட்டியை பார்த்த அமித்ஷா தன்னுடைய பேத்தியை மடியில் அமர வைத்துக் கொண்டார்.இந்திய அணி வெற்றி பெறும் தருவாயில் இருந்ததால் அமித் ஷா முகத்தில் புன்னகை ஆர்ப்பரித்துக் கொண்டது. குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவராக அமித்ஷா இருந்தார். தங்களுடைய சொந்த ஊரில் இந்தப் போட்டி நடைபெறுவதால் அவர் வந்தார்.
எனினும் பிரதமர் மோடி இன்றைய ஆட்டத்தில் பங்கேற்பார் என்ற செய்தி வந்தது. ஆனால் அவர் இந்த போட்டியில் பங்கேற்க வரவில்லை. அமித் ஷாவும் பிரதமர் மோடியும் தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் என்பதால் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இது போன்று முக்கிய போட்டிகளில் வந்து பார்ப்பது உண்டு. ஏற்கனவே அமித்ஷா ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி விளையாடிய ஒரு போட்டியை அகமதாபாத் நேரில் வந்து கண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.