இந்திய அணியின் பாக். சுற்றுப் பயணம் ரத்து

ஜனவரி 6ம் தேதி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல இருந்தது. ஆனால் மும்பை தாக்குதலையடுத்து இந்த சுற்றுப்பயணம் கேள்விக்குறியானது.
இந்திய அணி பாகிஸ்தான் செல்லக் கூடாது என விளையாட்டுத்துறை அமைச்சர் கி்ல் கூறியிருந்தார். இந்த விஷயத்தில் மத்திய அரசின் முடிவை ஏற்றுக் கொள்வோம் என கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.
இந் நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் அமைச்சர் கில் ஆகியோர் கிரிக்கெட் வாரியத்திடம் இது குறித்துப் பேசினர், அரசின் இந்த முடிவை தெரிவித்தனர்.
இதையடுத்து இந்திய அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் கைவிடப்படுவதாக இன்று கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது.
கடந்த மார்ச் மாதம் தனது பாகிஸ்தான் பயணத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்தது நினைவிருக்கலாம். இந்த நிலையில் மும்பை சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவும் தனது பயணத்தை ரத்து செய்கிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:09 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications