Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெற்றிகளை குவித்து டாப்பில் இருக்கும் இந்தியா.. அந்த ரகசியத்தை சொன்ன கோலி!

டெல்லி : சர்வதேச கிரிக்கெட்டில் முதல் இரண்டு இடங்களில் இந்தியா உள்ளதாக விராத் கோலி பெருமிதம் தெரிவித்துள்ளார். எழுச்சி மிகுந்த இளைஞர்களால் இது சாத்தியமானதாகவும் அவர் கூறியுள்ளார்.

தங்களது பொறுப்பை உணர்ந்து இந்திய வீரர்கள் செயல்பட்டு வருவதால், கிரிக்கெட்டில் உள்ள பாதுகாப்பின்மை குறைந்துள்ளதாகவும் விராத் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய இந்தியாவின் வெற்றிகளுக்கு வேகப்பந்து வீச்சாளர்களின் திறமை முக்கிய காரணமாக உள்ளதாக சுட்டிக்காட்டிய விராத் கோலி, இந்திய அணியின் தொடர்ந்த 4 இன்னிங்ஸ் வெற்றிகளுக்கு அதன் வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, மற்றும் உமேஷ் யாதவ் முக்கிய காரணம் என்றும் கூறியுள்ளார்.

 டெஸ்ட் தரவரிசையில் முதலிடம்

டெஸ்ட் தரவரிசையில் முதலிடம்

சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளின் தரவரிசை பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சமீபத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்க தேச அணிகளை வீழ்த்தி முதலிடங்களை நோக்கி மேலும் முன்னேறி வருகிறது. இந்திய கேப்டன் விராத் கோலியின் தலைமையின்கீழ் இந்திய அணி இந்த சாதனைகளை புரிந்து வருகிறது.

 விராத் கோலி பெருமிதம்

விராத் கோலி பெருமிதம்

இந்நிலையில் இந்தியாவின் வெற்றி ரகசியத்திற்கு அதன் வேகப்பந்து வீச்சாளர்களும் ஒரு காரணம் என்று தெரிவித்துள்ள கேப்டன் விராத் கோலி, சர்வதேச அளவில் முதல் இரண்டு இடங்களில் இந்தியா உள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

 வெற்றியை சாத்தியமாக்கிய இளைஞர்கள்

வெற்றியை சாத்தியமாக்கிய இளைஞர்கள்

இளைஞர்களை கொண்டு தன்னுடைய வெற்றிப் பயணத்தை இந்தியா துவங்கியுதாகவும் கூடிய விரைவிலேயே இந்திய வீரர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட்டு இந்தியா பல்வேறு சாதனைகளை புரிய காரணமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

 பொறாமை இல்லாத இந்திய வீரர்கள்

பொறாமை இல்லாத இந்திய வீரர்கள்

இந்திய வீரர்கள் பல்வேறு சாதனைகளை சொந்தமாக்கி வருவதால், கிரிக்கெட்டில் தற்போது பாதுகாப்பின்மை விலகியுள்ளதாக கோலி குறிப்பிட்டுள்ளார். மேலும் வீரர்கள், தங்களுக்குள் போட்டியுடன் செயல்பட்டாலும் பொறாமை இல்லாமல் மற்றவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 கடமையை செய்கிறோம்

கடமையை செய்கிறோம்

உலக கோப்பையை வெற்றி கொள்வது அனைத்து வீரர்களுக்கும் ஒரு கனவு என்று தெரிவித்துள்ள விராத் கோலி, வெற்றி எண்ணிக்கையை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதில்லை என்றும் தங்களுடைய செயல்முறைகளை அனுபவித்து செய்வதாகவும் கூறியுள்ளார்.

 விராத் கோலி உறுதி

விராத் கோலி உறுதி

எப்போதுமே வெற்றியை இழப்பதற்கு தான் விரும்ப மாட்டேன் என்றும் விராத் தெரிவித்துள்ளார். விளையாட்டு வீரர்கள் தங்களது அதிகபட்ச வெற்றியை அடைவதற்கு இந்த உறுதி உறுதுணையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

 இந்திய வெற்றிக்கு உறுதுணை

இந்திய வெற்றிக்கு உறுதுணை

இந்தியாவின் தொடர்ந்த இன்னிங்க்ஸ் வெற்றிகளுக்கு அதன் வேகப்பந்து வீச்சாளர்களின் திறனும் முக்கிய காரணம் என்றும் விராத் பெருமிதம் தெரிவித்துள்ளார். சமீபத்திய தொடர்களில் ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஸ்வர் குமார் போன்றவர்கள் இல்லாத போதிலும், இந்தியாவின் வெற்றியை இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் போன்றவர்கள் சாத்தியப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 இளம் வீரர்களுக்கு ஊக்கம்

இளம் வீரர்களுக்கு ஊக்கம்

இந்திய அணியின் வீரர்கள் தோழமையுடன் செயல்பட்டு வருவதாக சுட்டிக் காட்டியுள்ள விராத் கோலி, நம்முடைய அணி வீரர்கள், அடுத்த தலைமுறை வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், இதை தவிர்த்து சர்வதேச அளவில் முதல் 10 இடங்களில் இடம்பெறுவது அவர்களுக்கு முக்கியமானதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Sunday, December 1, 2019, 14:05 [IST]
Other articles published on Dec 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+