Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது.. களத்தில் நடந்த பரபர சம்பவம்.. 3 மாதத்தில் இந்த நிலையா?

சிட்னி: நேற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கீப்பிங் மிக மோசமாக சொதப்பியது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கு எதிரான 3வது டி 20 போட்டியில் ஆஸ்திரேலிய வெற்றி பெற்றது. இந்தியா வெற்றிபெற வாய்ப்பு இருந்தும் பவுலிங், பீல்டிங் சொதப்பியதால் இந்தியா தோல்வி அடைந்தது. நேற்று 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 186 ரன்கள் எடுத்தது. இந்தியா 174/4 ரன்கள் எடுத்தது.

இதன் மூலம் இந்தியாவை வீழ்த்தி ஆஸி. 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் டி 20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.

சொதப்பல்

சொதப்பல்

நேற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கீப்பிங் மிக மோசமாக சொதப்பியது குறிப்பிடத்தக்கது. நேற்று இந்திய அணிக்காக கே. எல் ராகுல் கீப்பிங் செய்தார். போட்டி முழுக்க இவர் கீப்பிங்கில் முக்கியமான கட்டங்களில் சொதப்பினார். ஒரு ஸ்டம்பிட் மற்றும் ரன் அவுட்டை ராகுல் மிஸ் செய்தார்.

கேட்ச்

கேட்ச்

அதேபோல் கேட்ச் ஒன்றையும் நூலிழையில் நழுவவிட்டார். நேற்று ராகுல் சரியாக ஆடி இருந்தால் கூடுதல் விக்கெட்டுகள் விழுந்து இருக்கும். ஏனென்றால் நேற்று மெக்ஸ்வெல் ஆடும் போது தேவையில்லாமல் டிஆர்எஸ் கேட்க சொன்னது ராகுல்தான். அதேபோல் மேத்யூ வேட்டிற்கு நடராஜன் போட்ட பவுலிங்கில் டிஆர்எஸ் கேட்க தாமதம் ஆனதும் ராகுலால்தான்.

கீப்பிங்

கீப்பிங்

கீப்பிங் செய்யும் இவர் எது எல்பிடபுள்யூ, எது டிப் விக்கெட் என்று தெரியாமல் குழம்பி போய் உள்ளார். தோனி அளவிற்கு இவர் துல்லியமாக கீப்பிங் செய்வது இல்லை. அதேபோல் குல்தீப், ஜடேஜா போன்றவர்கள் பவுலிங் செய்யும் போது தோனி அவர்களுக்கு வழி காட்டுவார். இதனால் ஜடேஜா போன்றவர்கள் தோனிக்கு கீழ் அதிக விக்கெட் எடுத்தனர்.

இல்லை

இல்லை

ஆனால் தற்போது ராகுல் இப்படி எல்லாம் அறிவுரைகளை வழங்குவது இல்லை. கீப்பிங்கில் நிற்கும் இவர் மிகவும் அமைதியாக இருக்கிறார். எதுவும் பேசுவது இல்லை. பவுலர்களுக்கு வழிகாட்டுவது இல்லை என்று புகார் வைக்கப்பட்டு உள்ளது. தோனி போல ராகுல் ஆக்டிவாக இருப்பது இல்லை என்று கூறுகிறார்கள்.

3 மாதம்

3 மாதம்

இந்திய அணியில் இருந்து தோனி ஓய்வு பெற்று மூன்று மாதங்கள் ஆகிறது. ஆனால் அதற்குள் புதிய கீப்பருக்கான பஞ்சம் ஏற்பட்டுள்ளது.பாண்ட், தினேஷ் கார்த்திக் இரண்டு பேருமே சரியாக ஆடாத நிலையில் தற்போது ராகுல் அங்கு களமிறங்கி ஆடி வருகிறார். இவர் நன்றாக பேட்டிங் செய்தாலும் கீப்பிங்கில் சொதப்பி அதிர்ச்சி அளித்து வருகிறார்.

Story first published: Wednesday, December 9, 2020, 23:02 [IST]
Other articles published on Dec 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+