For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மூன்றாண்டுகளில் உலகின் சிறந்த கிரிக்கெட் அணி எது தெரியுமா?

By Staff

டெல்லி: கடந்த மூன்று ஆண்டுகளில், மூன்று வகையான கிரிக்கெட் போட்டியிலும் உலகின் மிகச் சிறந்த அணி எது தெரியுமா? இதில் சந்தேகம் என்ன, இந்திய அணிதான். புள்ளி விவரங்கள் இதை உறுதி செய்கின்றன.

2015 ஜனவரி 1 முதல், 2018 ஜனவரி 1 வரையிலான மூன்றாண்டுகளில் இந்தியா 135 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 87ல் வென்றுள்ளது, 36ல் தோல்வி, 9 டிராவில் முடிந்துள்ளது. மூன்று போட்டிகளில் எந்த முடிவும் ஏற்படவில்லை. அதாவது இந்தியா, 64.44 சதவீத வெற்றிகளைப் பெற்று, மிகச் சிறந்த அணியாக உள்ளது.

India is on top


மூன்று ஆண்டுகளில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில், 9 தொடர்களை வென்றுள்ளது, ஒன்றை டிரா செய்துள்ளது.

12 ஒருதினப் போட்டித் தொடர்களில் 9ல் இந்தியா வென்றது, 3ல் தோல்வியடைந்தது. 2015ல் வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. ஆனால் அதன் பிறகு, தொடர்ந்து 8 தொடர்களை வென்றுள்ளது.

டி-20 போட்டிகளிலும் இந்திய அணயின் ராஜாங்கம் தொடர்ந்தது. 13ல், 8 தொடர்களில் வென்ற இந்திய அணி, 2ல் டிரா செய்தது, மூன்றில் தோல்வியடைந்தது. இந்தத் தோல்விகளும், 2015 துவக்கத்தில் கிடைத்தவையை. அதன்பிறகு தொடர்களை இந்தியா இழக்கவில்லை.

ஐசிசி தரவரிசையில் இந்திய அணி டெஸ்டில் முதலிடத்திலும், ஒருதினப் போட்டியில் 2-வது இடத்திலும், டி-20ல் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

அதிக வெற்றி சதவீதத்தில் நியூசிலாந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த அணி, 118 போட்டிகளில், 69ல் வென்றுள்ளது. தென்னாப்பிரிக்கா, 116ல் 68ல் வென்றுள்ளது.





Story first published: Thursday, January 4, 2018, 17:12 [IST]
Other articles published on Jan 4, 2018
English summary
India is the top team in 3 years
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X