Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டாஸ் ராசியில்லாத கோலி.. குக்கின் முடிவு, விஹாரியின் தொடக்கம்.. 5வது டெஸ்ட் சுவாரஸ்யம்

லண்டன் : இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் முதல் நாளான நேற்று இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை எடுத்துள்ளது.

india is on top against england fifth test day 1 highlights


முதல் நாள் போட்டியில் நடைபெற்ற டாப் 5 நிகழ்வுகள்

1 டாஸில் மொத்தமாக தோல்வி அடைந்த கோஹ்லி

இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி இந்த டெஸ்ட் போட்டியிலும் டாஸில் வெற்றி பெறவில்லை. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் அனைத்து போட்டிகளிலும் டாஸை இழந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கோஹ்லி வேடிக்கையாக, நாணயத்தின் இரண்டு பக்கமும் தலை இருந்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும் என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

2 கடைசி போட்டியில் குக்கின் அரைசதம்

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் குக் விளையாடும் கடைசி டெஸ்ட் போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் குக் சிறப்பாக விளையாடி 71 ரன்களை எடுத்தார். இந்த தொடரில் தொடக்க வீரர் அடிக்கும் முதல் அரைசதம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனது முதலாவது மற்றும் கடைசி போட்டிகளில் அரைசதம் அடித்த 19ஆவது வீரர் குக் என்பது குறிப்பிடத்தக்கது.

3 மொயீன் அலியின் ஆமை வேக அரைசதம்

இங்கிலாந்து அணியின் ஆல் ரௌண்டர் மொயீன் அலி டெஸ்ட் போட்டிகளில் தனது மெதுவான அரைசத்தை பதிவு செய்தார். அவர் 169 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

4 இஷாந்த் சர்மாவின் அபார பந்துவீச்சு

இந்திய அணியின் வேகபந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதன்மூலம் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் கபில் தேவுடன் முதல் இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார் (43 விக்கெட்கள்)

5 குக்கின் முடிவு, விஹாரியின் ஆரம்பம்

இந்த டெஸ்ட் போட்டி இங்கிலாந்து வீரர் குக்கின் கடைசி ஆட்டமாகவும்,இந்திய அணியின் வீரர் ஹனும விஹாரியின் முதல் ஆட்டமாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது. விஹாரி இந்திய அணியின் சார்பாக டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கும் 292ஆவது வீரர் ஆவார்.



Story first published: Saturday, September 8, 2018, 12:37 [IST]
Other articles published on Sep 8, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+