மூன்றாவது டெஸ்ட்... இந்தியா 292 ரன்கள் முன்னிலை.. இரண்டாம் நாள் டாப் 5
Recommended Video

மூன்றாவது டெஸ்ட்...இந்தியா 292 ரன்கள் முன்னிலை.. வீடியோ
ட்ரெண்ட்பிரிட்ஜ் : இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் டெஸ்டில் 31 ரன்களிலும், இரண்டாவது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்களிலும் இங்கிலாந்து வென்றது.
இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி ட்ரெண்ட்பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்களை எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸ்யை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 161 ரன்களை எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 292 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இரண்டாம் நாளில் நடந்த டாப் 5 நிகழ்வுகள்
1 22 ரன்களுக்கு நான்கு விக்கெட்கள்
இந்திய அணி தனது முதல் நாள் ஆட்டமுடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்களை எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 329 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தனது கடைசி 4 விக்கெட்களை 22 ரன்களுக்கு இழந்தது குறிப்பிடத்தக்கது.
2 பாண்டியாவின் அதிரடி 5 விக்கெட்கள்
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா அற்புதமாக பந்து வீசி 5 விக்கெட்களை எடுத்தார். டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட்களை வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் இங்கிலாந்து அணி 161 ரன்களில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.
3 ரிஷப் பந்தின் மற்றொரு சாதனை
இந்திய அணியின் அறிமுக வீரர் ரிஷப் பந்த் தனது முதல் ரன்களை சிக்ஸராக அடித்து அசத்தினார். இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்சில் ரிஷப் பந்த் 5 கேட்ச்களை பிடித்து அசத்தினார். அறிமுக போட்டியில் 5 கேட்ச்களை பிடித்த நான்காவது இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார்.
4 பட்லரின் கடைசி கட்ட அதிரடி
இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 9 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்களை எடுத்து தத்தளித்தது. அப்போது கடைசி விக்கெட்டுக்கு கை கோர்த்த பட்லர் மற்றும் ஆண்டர்சன் கடைசி விக்கெட்டிற்கு 33 ரன்களை எடுத்தனர். பட்லர் அதிரடியாக ஆடி 39 ரன்களை எடுத்து இந்திய அணியின் லீடிங் ரன்களை குறைத்தார்.
5 இந்திய வீரர்களின் அதிரடி தொடக்கம்
முதல் இன்னிங்சில் 168 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ்யை தொடங்கிய இந்திய வீரர்கள் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தனர். ராகுல் 34 ரன்களையும் தவான் 44 ரன்களையும் சேர்த்து அதிரடி தொடக்கம் கொடுத்தனர்.
Story first published: Monday, August 20, 2018, 9:02 [IST]
Other articles published on Aug 20, 2018


Click it and Unblock the Notifications