இந்தியாதான் உலக கிரிக்கெட்டின் இதயத்துடிப்பு, சிகரம்.. புகழும் இங்கிலாந்து வீரர்
லண்டன் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஜொனாதன் ட்ராட் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.
தன் கடைசி முதல் தர போட்டியில் பங்கேற்க உள்ள அவர், தன் கிரிக்கெட் வாழ்க்கை பற்றி விஸ்டன் இதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் இந்தியா தான் கிரிக்கெட்டின் இதயத்துடிப்பு என கூறியுள்ளார் ஜொனாதன் ட்ராட். தன் மறக்க முடியாத போட்டியாக இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெற்ற போட்டியை தான் குறிப்பிட்டுள்ளார் அவர்.

இங்கிலாந்தின் முக்கிய வீரர் ஜொனாதன்
ஜொனாதன் ட்ராட் இங்கிலாந்து அணியின் முக்கிய வீரராக 2009 முதல் 2012 வரை இருந்தார். ஆஷஸ் வெற்றி, வங்கதேசதில் தொடர் வெற்றி, இலங்கை, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளுக்கு எதிராக தொடர் சமன் செய்தது என இங்கிலாந்து அணியின் முக்கியமான நேரங்களில் அணியில் இருந்தவர் ஜொனாதன் ட்ராட்.

மறக்க முடியாத போட்டி எது?
தன் மறக்க முடியாத போட்டி பற்றி பேசிய அவர், "இந்தியாவில் பெற்ற வெற்றி தான் மறக்க முடியாத வெற்றி. முக்கியமாக அப்போதைய அணியில் சேவாக், டெண்டுல்கர், ஹர்பஜன், தோனி உள்ளிட்டோர் இருந்தனர்" என கூறினார்.

இந்தியா தான் கிரிக்கெட்டின் சிகரம்
இந்தியா பற்றி குறிப்பிட்ட ஜொனாதன், "நான் எப்போதுமே இந்தியா தான் உலக கிரிக்கெட்டின் இதயத்துடிப்பு என நினைக்கிறேன். இங்கிலாந்து தான் கிரிக்கெட்டின் வீடு. ஆனால், இந்தியா தான் அதன் உச்சகட்ட சிகரம்" என கூறினார்.

ஓய்வுக்கு பின் என்ன?
தன் ஓய்வுக்கு பின் பயிற்சியாளராக இருக்க நினைப்பதாக கூறியுள்ளார் ஜொனாதன் ட்ராட். இவர் சில காலம் மன அழுத்தத்தில் இருந்து பின் மீண்டு வந்தார். எனவே, தன் அனுபவங்களை இளம் வீரர்களுக்கு அளிக்க விரும்புவதாக கூறுகிறார்.


Click it and Unblock the Notifications