Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோற்றதோ தென் ஆப்ரிக்கா… வந்த சிக்கலோ இந்தியாவுக்கு…!! இது என்ன புதுக்கதை

Recommended Video

WC 2019: IND Vs SA: இந்தியாவை தோற்கடிக்காம விட மாட்டோம்.. தென் ஆப்ரிக்கா புது திட்டம்- வீடியோ

லண்டன்:தென்ஆப்ரிக்காவின் தொடர் தோல்விகளால் துவண்டுள்ள தென் ஆப்ரிக்கா, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வீறு கொண்டு எழும் என்று எதிர்பார்க்கப் படுவதால் இந்திய அணிக்கு நெருக்கடி காத்திருக்கிறது.

கடந்த 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கிய உலக கோப்பையின் முதல் போட்டியில், இங்கிலாந்து, தென் ஆப்ரிக்க அணிகள் மோதின. இங்கிலாந்து அணி வென்றது. இதனைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணிக்கும், பாகிஸ்தானுக்கும் நடந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அபார வெற்றி பெற்றது.

அதன் பின்னர் நடந்த 2 போட்டிகளில் இலங்கை, நியூசிலாந்து போட்டியில் நியூசி. வென்றது. ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையேயான போட்டியில் வங்கதேசம் ஜெயித்தது.

5ம் தேதி முதல் ஆட்டம்

5ம் தேதி முதல் ஆட்டம்

இந்திய அணி வரும் 5ம் தேதி தென் ஆப்ரிக்க அணியை சவுதாம்டனில் எதிர் கொள்கிறது. அதற்காக இந்தியா பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலியின் கைவிரல்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு ஐஸ் டம்ளரில் விரல்களை வைத்துக்கொண்டபடி அவர் சென்ற புகைப்படம் இணையத்தில் வலம்வருகிறது.

கைகளில் காயம்

கைகளில் காயம்

உலக கோப்பை ஆட்டம் நெருங்கும் நேரத்தில் கோலிக்கு நடந்துள்ள இந்த காயம், ரசிகர்களை சற்றே கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது. காயம் குறித்தும், அணியில் இடம்பெறுவாரா என்பது குறித்தும் தகவல் இல்லை. கோலிக்கு இந்த காயம் எப்படி உண்டானது என்பது பற்றி ஐசிசி எந்த விளக்கமும் அளிக்க வில்லை.

குணமடையவில்லை

குணமடையவில்லை

இந் நிலையில், தென் ஆப்ரிக்காவின் 2 முக்கிய வீரர்கள் காயம் அடைந்து உள்ளனர். தொடக்க ஆட்டக்காரர் ஹசிம் அம்லாவின் ஹெல்மெட் பட்டையில் ஆர்ச்சர் வீசிய பவுன்சர் பட்டு அவர் ஓய்வில் இருக்கிறார். வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெயின் தோள் பட்டை காயத்தில் இருந்து முழுமையாக இன்னும் குணம் அடையவில்லை.

இங்கிடிக்கு தசைபிடிப்பு

இங்கிடிக்கு தசைபிடிப்பு

இந்த சூழலில் அணியில் முக்கிய பந்துவீச்சாளரான லுங்கி இங்கிடி நேற்று 4 ஓவர்கள் மட்டும் வீசிய நிலையில் தசைப்பிடிப்பு காரணமாக ஓய்வறைக்குச் சென்றவர் கடைசி வரை திரும்பவில்லை. பீல்டிங் செய்தபோது, விழுந்ததில் அவரின் காலில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. இந்த தசைப்பிடிப்பு குணமடைய ஒருவாரம் வரை ஆகலாம் என்பதால், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிடி விளையாட மாட்டார்.

கட்டாயத்தால் நெருக்கடி

கட்டாயத்தால் நெருக்கடி

தென் ஆப்ரிக்காவின் தொடர் தோல்வியால் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே இந்தியாவுக்கு எதிராக அதிரடியாகவே விளையாடும். எனவே, இந்தியா முதல் போட்டியே மிகுந்த சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது திண்ணம்.

Story first published: Monday, June 3, 2019, 17:13 [IST]
Other articles published on Jun 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+