Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பையிலிருந்து இந்தியா வெளியேற்றம்.. இலங்கைக்கு எதிராக போராடி தோல்வி.. ரசிகர்கள் அதிருப்தி

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இலங்கை அணியிடம் இந்தியா தோல்வியை தழுவியது.

Recommended Video

IND vs SL போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் Srilanka அணி வெற்றி *Cricket

இதன் மூலம் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய அணி 99.99 சதவீதம் வெளியேறிவிட்டது.

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசியது. இந்திய அணியில் ரவி பிஸ்னாய்க்கு பதிலாக அஸ்வின் சேர்க்கப்பட்டார். தொடக்க வீரராக ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் களமிறங்கினர்.

தடுமாறிய இந்தியா

தடுமாறிய இந்தியா

சிஎஸ்கே வீரர் தீக்சனா வீசிய பந்தை, ஸ்விப் செய்ய முயன்ற போது, அவர் எல்பி டபிள்யூ ஆனார்.. இதனைத் தொடர்ந்து நட்சத்திர வீரர் விராட் கோலி மதுசங்கா வீசிய பந்தை கணிக்காமல் லேக் சைடில் சிக்சர் அடிக்க முயன்ற போது கிளின் போல்ட் ஆகியதால் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனையடுத்து 13 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்த இந்தியா தடுமாறியது. இதனையடுத்து, ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

ரோகித் அதிரடி

ரோகித் அதிரடி

முதலில் பொறுமையாக விளையாடிய ரோகித் சர்மா பிறகு அதிரடியை காட்டினார்.. 41 பந்துகளில் 72 ரன்கள் விளாசி ரோகித் ஆட்டமிழந்தார். இதில் 4 சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். மறுமுனையில் சூர்யகுமார் 29 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். ரிஷப், ஹர்திக் ஜோடி தலா 17 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பியது. தீபக் ஹுடாவும் 3 ரன்களில் வெளியேற இந்தியா தடுமாறியது. இறுதியில் அஸ்வின் ஒரு சிக்சர் அடித்து 7 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி 8 ஓவர் முடிவில் 173 ரன்கள் எடுத்தது.

அபார தொடக்கம்

அபார தொடக்கம்

174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் நிசாங்கா, குசேல் மெண்டீஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடினார். பவர்பிளேவின் 5வது ஓவரில் மட்டும் இலங்கை வீரர்கள் 18 ரன்கள் விளாசினர். இலங்கை வீரர் நிசாங்கா 33 பந்துகளில் அரைசதம் விளாசினார். மறுபுறும் குசேல் மெண்டிஸ் 37 பந்துக்கு 57 ரன்கள் விளாசினார். இதனால் முதல் விக்கெட்டுக்கு இலங்கை அணி 97 ரன்கள் சேர்த்தது.

இலங்கை வெற்றி

இலங்கை வெற்றி

இதனையடுத்து, சாஹல், அஸ்வின் ஆகியோர் கட்டுக்கோப்பாக பந்துவீசி இலங்கைக்கு சற்று நெருக்கடி தந்தனர். குறிப்பாக சாஹல் வீசிய ஒரே ஓவரில் 2 விக்கெட் வீழ்ந்தது. இருப்பினும், ராஜபக்சா, ஷனகா ஆகியோர் அதிரடியாக விளையாடினர். புவனேஸ்வர் குமார் வீசிய 19வது ஓவரில் 14 ரன்கள் கொடுக்கப்பட்டது. இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 பந்துகளே தேவைப்பட்ட நிலையில், ஆர்ஸ்தீப் யாக்கர்களாக வீசி நெருக்கடி அளித்தார். இருப்பினும் கடைசி 2 பந்தில் 2 ரன் தேவைப்பட ஓவர் த்ரோவில் இலங்கை ஓடியே 2 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Story first published: Tuesday, September 6, 2022, 23:39 [IST]
Other articles published on Sep 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+