Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PAK vs NZ- இந்தியாவுக்கு ஆப்பு வைத்த பாகிஸ்தான்.. மகளிர் கிரிக்கெட்டில் பாக். அழிந்துவிடும்- Fatima

மும்பை : மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வியை தழுவியது. இதன் மூலம் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பை இந்தியா இழந்தது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி அரை இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது.

துபாயில் நடைபெற்ற 19வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 56 ரன்களில் சுருண்டது. இந்த நிலையில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனா சக வீராங்கனைகளை கடுமையாக சாடினார்.

t20 world cup 2024 pak w vs nz w fatima sana women cricket


இது குறித்து பேசிய அவர் நாங்கள் பந்துவீச்சில் நன்றாகவே செயல்படுவோம். ஆனால் எங்களுடைய பேட்டிங் மற்றும் பில்டிங்கில் நாங்கள் முன்னேற்றம் அடைய வேண்டும். மகளிர் கிரிக்கெட்டுக்கு உரிய தகுதி எங்களிடம் இல்லை. எங்கள் அணியின் சீனியர்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும்.

இதுபோன்ற ஆட்டங்களில் அவர்கள் ரன்கன் சேர்க்க வேண்டும். எங்களுடைய பந்துவீச்சு படை இன்றைய ஆட்டத்தில் நன்றாகவே செயல்பட்டது. எனினும் எங்களுடைய பேட்டிங்கில் நாங்கள் முன்னேற்றம் அடைய வேண்டும். இல்லையென்றால் மகளிர் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியால் தாக்குப் பிடிக்க முடியாது. விரைவில் அழிந்துவிடும். இதை ஒரு பாடமாக பாகிஸ்தான் வீராங்கனைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பாத்திமா சானா தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பேசிய நியூசிலாந்து அணி கேப்டன் சோபி டிவைன், அரை இறுதிக்கு தகுதி பெற்றதை எங்களால் நம்ப முடியவில்லை. கடைசியாக நாங்கள் 2016 ஆம் ஆண்டு தான் அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றோம். தற்போது பல ஆண்டுகள் கழித்து நாம் அரையிறுதிக்கு சென்றிருக்கிறோம். இந்த வெற்றியை நாங்கள் கொண்டாடுவோம்.

எனினும் அடுத்த கட்ட போட்டிகளை நாங்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் சரியாக விளையாடினால் உலக அளவில் நாங்கள் எந்த அணியை வேண்டுமானாலும் வீழ்த்த முடியும். எங்கள் அணி வீராங்கனை நினைத்து நாம் பெருமை கொள்கிறேன் என்று சோபி டிவைன் கூறியுள்ளார். குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் அரையிறுதி சிட்டுக்கு தகுதி பெற்று இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, October 14, 2024, 23:34 [IST]
Other articles published on Oct 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+