
அதிரடி நீக்கம்
கேஎல் ராகுல் அணியின் துணை கேப்டனாக இருப்பதால் அவரை எப்படி நீக்குவது, அது தெய்வ குத்தமாக ஆகிவிடும் என்ற ரேஞ்சில் சிலர் பேசி வந்தனர். இந்த நிலையில், ராகுலை துணை கேப்டன் பதவியிலிருந்து தேர்வுக்குழு அதிரடியாக நீக்கி உள்ளது. மேலும் துணை கேப்டன் என்ற பதவியும் வேறு யாருக்கும் தரப்படவில்லை.

கடைசி 2 டெஸ்ட்
மேலும் 2வது டெஸ்டிலிருந்து ரஞ்சி போட்டியில் விளையாட விலகிய ஜெய்தேவ் உனாட்கட் கடைசி 2 போட்டிக்கும் அணிக்கு திரும்பினார். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் களமிறங்க உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

உனாட்கட்
இதில் முதல் ஒருநாள் போட்டிக்கு மட்டும் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் தனிப்பட்ட காரணத்திற்காக முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்க மாட்டார். இதே போன்று காயம் காரணமாக ஒருநாள் பாட்டிகளில் பங்கேற்காமல் இருந்த ஜடேஜா அணிக்கு திரும்பி உள்ளார். இதே போன்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணியில் ஜெய்தேவ் உனாட்கட் இடம்பெற்றுள்ளார்.

இந்திய அணி விவரம்
ரோகித், சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, வாசிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், சாஹல், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகமது ஷமி, உம்ரான் மாலிக். உனாட்கட்


Click it and Unblock the Notifications











