
2வது டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் பகலிரவு போட்டியுடன் கூடிய 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடப்பட்ட பகலிரவு போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து தற்போது மெல்போர்னில் 2வது டெஸ்ட் போட்டி துவங்கி நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது.

195 ரன்களுக்கு வீழ்ந்த ஆஸ்திரேலியா
இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அடுத்தடுத்து வீழ்ந்த நிலையில், 195 ரன்களில் அந்த அணி சுருண்டது. இந்நிலையில், தற்போது இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்சில் ஆடி வருகிறது. இதில் துவக்க வீரர்கள் சொதப்பிய நிலையில், கேப்டன் அஜிங்க்யா ரஹானே மற்றும் ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்துள்ளனர்.

ரஹானே 104 ரன்கள்
போட்டி மழையால் இடையிடையே பாதிக்கப்பட்டாலும் கேட்பன் அஜிங்க்யா ரஹானே இந்த இன்னிங்சில் 104 ரன்களை குவித்துள்ளார். ஜடேஜாவும் அவருக்கு ஈடுகொடுத்து ஆடி அவுட்டாகாமல் 40 ரன்களை அடித்துள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்தியா 82 ரன்கள் முந்தியுள்ளது.

ரஹானே 4வது சதம்
ரஹானே இதன்மூலம் தனது 4வது சதத்தை டெஸ்ட் போட்டிகளில் அடித்துள்ளார். மெல்போர்னில் மட்டுமே அவர் அடித்துள்ள இரண்டாவது சதம் இது. மேலும் வெல்லிங்டன் மற்றும் லார்ட்ஸ் மைதானங்களில் அவர் முந்தைய சதங்களை அடித்துள்ளார்.

சிறப்பாக விளையாடிய ரஹானே
விராட் கோலி, இஷாந்த் சர்மா, ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத இந்த போட்டியில் கேப்டனாக களமிறங்கியுள்ள அஜிங்க்யா ரஹானே, தலைமை பொறுப்பையும் ஏற்று பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக ஆடி 195 பந்துகளில் இந்த போட்டியில் சதத்தை கடந்துள்ளார்.

தொடரின் அதிக ரன்கள்
இந்த தொடரில் ஆடப்படும் இரண்டாவது போட்டி இது. கடந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி 74 ரன்களை அடித்து ஆட்டமிழந்த நிலையில், இரண்டாவது இன்னிங்சில் சொற்ப ரன்களில் இந்தியா சுருண்டது. இந்நிலையில் தற்போது இந்த போட்டியில் சதத்தை கடந்ததன் மூலம் இந்த தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற பெருமை ரஹானேவிற்கு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications