Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணி சீனியர்களை வெளுத்து வாங்கிய கவாஸ்கர்.. இதை செய்தால் உலககோப்பை கிடைக்கும் என கருத்து

மும்பை : பலம் வாய்ந்த இந்திய அணியை முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தி இருக்கிறது.

ஏற்கனவே டி20 உலக கோப்பை மற்றும் நியூசிலாந்து தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியது.இந்த நிலையில் , நேற்று நடைபெற்ற சம்பவம் ரசிகர்கள் இடையே மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், மூத்த வீரர்களுக்கு கடும் எச்சரிக்கை ஒன்றை கொடுத்திருக்கிறார்.

ராகுலுக்கு ஆதரவு

ராகுலுக்கு ஆதரவு

இது குறித்து பேசிய அவர், நேற்றைய ஆட்டத்தில் பேட்டிங் காரணமாகவே நாம் தோல்வியை தழுவினோம். கூடுதலாக 40, 50 ரன்கள் அடித்து இருந்தால் இந்தியா நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும். கேஎல் ராகுல் அந்த கேட்சை விட்டதால்தான் இந்தியா தோல்வி தழுவியது என்று சொன்னால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.கே எல் ராகுல் நேற்று பேட்டிங் சிறப்பாக செயல்பட்டார். மேலும் கடைசி நேரத்தில் விக்கெட் கீப்பராகவும் பணிபுரிந்தார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

இந்திய அணியில் தற்போது அதிக மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. வீரர்களுக்கு ஓய்வு என்ற பெயரில் பிசிசிஐ எடுக்கும் இந்த நடவடிக்கை ஏமாற்றத்தை அளிக்கிறது. நீங்கள் அணியை இப்படி மாற்றிக் கொண்டே இருந்தால் உங்களால் நிலையான அணியை உருவாக்க முடியாது.சரியான அணியை கட்டமைக்க அதிக காலம் தேவைப்படும்.

தொடர்ந்து விளையாடுங்கள்

தொடர்ந்து விளையாடுங்கள்

உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு ஆண்டு தான் இருக்கிறது. இதனால் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு முக்கியமான வீரர்கள் அனைத்து போட்டியிலுமே விளையாடும் வகையில் அணியை தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால் உலக கோப்பையில் இது போன்ற தோல்வியை நாம் பெற முடியாது.

இந்திய அணியின் முக்கிய வீரர்களான விராட் கோலி ,ரோஹித் சர்மா ,ஷிகர் தவான், கே எல் ராகுல் அனைத்து போட்டிகளுமே இனி விளையாட வேண்டும்.

கவாஸ்கர் கருத்து

கவாஸ்கர் கருத்து

களத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப ஒரு இரண்டு வீரர்களை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் அணியின் சீனியர்கள் இனி அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் விளையாட வேண்டும். ஓய்வென்ற பேச்சுக்கே இடம் இருக்கக் கூடாது. நீங்கள் இந்திய அணிக்காக விளையாடுகிறீர்கள். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.உலகக்கோப்பை வேண்டும் என்றால் நீங்கள் ஓய்வு எடுக்கக் கூடாது.அதனால் தான் கூறுகிறேன் நீங்கள் ஒரே அணியை வைத்து தொடர்ந்து போட்டிகளில் களமிறங்கினால் தான் அணியில் ஒரு பிணைப்பு ஏற்படும். என்று கவாஸ்கர் கூறினார்.

Story first published: Monday, December 5, 2022, 16:30 [IST]
Other articles published on Dec 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+